
MalaysiaInternational
டத்தோஸ்ரீ எம்.சரவணன் பொது சேவை, மனித மேம்பாடு முன்னோடித் தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிப்பு
புத்ராஜெயா, மே 29-
பொது சேவை வழங்கி வருவதுடன் மனித மேம்பாடு முன்னோடித் தலைமைத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக திகழும் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு பொதுச்சேவை மற்றும் சிறந்த முன்னோடி தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயாவில் நிலையான மேம்பாடு வாரியத்தின் அனைத்துலக அமைதி, நல்வாழ்வு மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் நேரில் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொது சேவையுடன் மனித மேம்பாடு சார்ந்த வளர்ச்சியில் முன்னோடித் தலைமைத்துவத்தை வழங்கி வரும் டத்தோஸ்ரீ சரவணனுக்கு SDG IMPACT AWARD விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



