MalaysiaInternational

உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி (WITEX) இந்தியர்கள், சீனர்களுக்கும் சிறந்த தளம்  2025ஆம் ஆகஸ்ட் 22 முதல் 23 வரை நடைபெறும் Nexus வட்டார நிர்வாகி சுமன் மாதவன் தகவல்

 

 

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்

ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ

 

கோலாலம்பூர், மே 29-

மலேசியாவில் WITEX எனப்படும் இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி 2025 மற்றும் உலக கலாச்சார கலை விழா (WCAF) உலகளாவிய இஸ்லாமிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சார, கலை கண்காட்சி இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு ஒரு தளமாக அமையும் என்று Nexus. DMC நிறுவனத்தின் தெற்காசிய வட்டார நிர்வாகி சுமன் மாதவன் கூறினார்.

 

MATA எனப்படும்

மலேசியா சுற்றுலா முகவர் சங்கம் ஏற்பாடு செய்யும் மூன்றாவது World Islamic Tourism & Trade Expo (WITEX 2025) மற்றும் முதல் World Cultural & Arts Festival (WCAF 2025) நிகழ்வுகள் இவ்வாண்டு ஆகஸ்ட் 22 முதல் 24 வரை சன்வே ரிசார்ட் ஹோட்டலில் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் இந்த வாயப்பை இந்திய சுற்றுலாக முகவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி சுமன் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு 150 க்கும் மேற்பட்ட அரங்குகள், இஸ்லாமிய மற்றும் இஸ்லாமிய அல்லாத நாடுகள், ASEAN, BRICS உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச சுற்றுலாத் துறையினரின் பங்கேற்புடன் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இக்கண்காட்சியில் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம் என்று சுமன் தெரிவித்தார்.

“கலாச்சாரம் மற்றும் புதுமைகளின் மூலம் இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளுடன், WITEX 2025 மற்றும் WCAF 2025 ஆகியவை வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு பன்முக தளமாக அரசு அதிகாரிகள், சுற்றுலா பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைக்கும்.

இந்த நிகழ்வுகள் Visit Selangor 2025 மற்றும் Visit Malaysia 2026 ஆகியவற்றுக்கு ஆதரவாக நடைபெறுகின்றன. ஆகையால், இந்திய சுற்றுலா முகவர்கள் கலந்து கொள்ளலாம் என்று சுமன் மாதவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தகவல்களுக்கு www.witex.my என்ற இணையதளத்தை அணுகலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button