Malaysia

திரும்பி பார்க்க வைத்த மின்னல் எப்.எம் பொன்வசந்த நினைவுகள் ஜூலை ஒன்றோடு 24 மணிநேர ஒளிப்பரப்பு 28 ஆண்டுகள் நிறைவு பெற்றது

திரும்பி பார்க்க வைத்த மின்னல் எப்.எம் பொன்வசந்த நினைவுகள்

ஜூலை ஒன்றோடு 24 மணிநேர ஒளிப்பரப்பு 28 ஆண்டுகள் நிறைவு பெற்றத

 

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

 

கோலாலம்பூர், ஜூலை 2-

மின்னல் FM என்பது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான தமிழ் வானொலி நிலையம் ஆகும். இது மலேசிய தமிழர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் தகவல்களை வழங்கும் நோக்கில் ஒலிபரப்பு செய்கிறது.

 

மின்னல் FM, உலகிலேயே 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் முதல் தமிழ் மொழி வானொலி நிலையம் என்ற பெருமையைப் பெறுகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் நம் இந்திய இளைஞர் மன்ற உச்சமன்ற உறுப்பினகும் தகவல் பிரிவுத் தலைவருமான திரு.செ.ஆறுமுகம் பிள்ளை என்றால் அது மிகையில்லை.

 

ஜூலை 1, தனது 28ஆவது வருடம் பயணத்தை திரும்பி பார்க்க வைத்த பொன் வசந்த நினைவுகள் தங்களது இளமைக் காலத்தில் வானொலி என்பது எங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகலே இருந்தது. தமிழ் வானொலி ‘ஒலியலை ஆறு ‘ என பெயர் மாற்றம தேவைப்பட்டது.

 

ஆகவே நமது ஒலிபரப்பு வானொலி ஆறிலிருந்து மின்னல் எப்.எம. (minnal fm) ஆகப் பெயர் மாற்றம் கண்டது. தமிழ் வானொலி மலேசிய அரசாங்கத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை. முதல் முறையாக 24 மணிநேரம் ஒலிபரப்பை செய்ய வேண்டும் என மலேசிய இந்திய இளைஞர் மன்ற உச்சமன்ற உறுப்பினகும் தகவல் பிரிவுத் தலைவருமான திரு.செ.ஆறுமுகம் பிள்ளை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

பல கடிதம் மூலம் அறிக்கை வெளியிட்டார். பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் செய்து வெற்றியும் பெற்றார்.

அப்போது தமிழ்மொழிக்குக் குறைந்த ஒலிபரப்பு நேரமே வழங்கப்பட்டு இருந்தது.

 

தகவல் அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ முகமட் ரஹ்மாட் (1987-1999) அதற்கு ஒப்புதல் அளித்தார். ஒலிபரப்பு நேரத்தை கூட்டுவதற்கு அப்போதைய தலைவர் டாக்டர் வீ. பூபாலன் பெரும் பங்காற்றினார். அதற்குத் தேவைப்பட்ட ஆள் பலத்திற்கும், கூடுதல் தமிழில் செலவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

 

ஒலிபரப்பு நேரம் கூடிய வேளையில் ஆள்பலத் தேவை கட்டங்கட்டமாக அதிகரிக்கப்பட்டது. அவருடைய முயற்சியின் பலனாக 19 மணி நேரம் மட்டுமே ஒலித்து வந்த வானொலி ஆறு, ஜூலை முதல் தேதி தொடங்கி 24 மணி நேரமும் ஒலிக்கத் தொடங்கியது

 

இன்றைய நிலை

மின்னல் எப்.எம் ஒலிபரப்பு கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரி தலைமையகத்தில் இருந்து 92.3 / 96.3 அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

24 மணி நேரமும் நேயர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் மின்னல் பண்பலை, தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது என்றால் மிகையாகாது.

 

மேலும் இளைஞர்கள், குழந்தைகளுக்கும், சமூகம், கலை, இலக்கியம் என மலேசியத் தமிழ் சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிக்கு இத்தமிழ் வானொலி ஒலிபரப்பு பங்காற்றியுள்ளது. எழுத்து மற்றும் கலைத்துறையில் பல ஆளுமைகள் உருவாகக் காரணமாக இருந்துள்ளது.

 

சரியான தமிழும், முறையான உச்சரிப்பும் மின்னலின் உயிர் நாடி. அதற்கு வித்திட்ட மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள், இன்னாள் பணியாளர்களுக்கு திரு.ஆறுமுகம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

 

தொடர்ந்து சிறப்பான முறையில், நிறைவான தகவல்களோடு பீடுநடை போட வேண்டும் என்று ஆறுமுகம் செல்லப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button