
மலேசிய அருளொளி நற்பணி மாமன்றம் நடத்திய பன்னாட்டு யோகா தினக் கொண்டாட்டம்
மலேசிய அருளொளி நற்பணி மாமன்றம் நடத்திய பன்னாட்டு யோகா தினக் கொண்டாட்டம
ஜொகூர், ஜூலை 2-
மலேசிய அருளொளி நற்பணி மாமன்றம் 4-வது ஆண்டாக பன்னாட்டு யோகா தினக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து மிக சிறப்பாக நடத்தி முடித்தனர்.
இவ்வாண்டு ஜோன் கேமிலாலாங்கின் கூலாய் நகராண்மை மன்ற செயலவை உறுப்பினரும் கூலாய் தொகுதியின் மஇகா செயலாளருமான திரு. ஷண்மதகுமரன் மற்றும் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடந்தேறியது.
கூலாய் வட்டார மஇகா நிரந்திர தலைவர் சுப்பையா சோலைமுத்து ஐயா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் துவான் அஜிஜான் முகமாட் சாலே, கெத்துவா கம்போங் மிலாயூ, சேங்காங் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமுக ஆய்வாளர்கள் (கூலாய் வர்த்தக சங்க உறுப்பினர்கள்) என 200 பேர் கலந்து இந்த பன்னாட்டு யோகா தினக் கொண்டாட்டத்தைச் சிறப்பித்தனர்.
மேலும் திரு. ஷண்மதகுமரன், இந்த யோகா தினக் கொண்டாட்டத்தைச் சிறப்பாக நடத்துவதற்கு மண்டபத்தையும் வருகையாளர்களுக்கு உணவையும் ஏற்பாடு செய்து தந்த அவருக்கு மலேசிய அருளொளி நற்பணி மாமன்றத்தின் ஜொகூர் மாநில மன்ற தலைவர் திருமதி யசோதா முனுசாமி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்
கொண்டார்.
ஜொகூர் மாநில தலைமை ஆசிரியர்கள் கழகத்தின், துணைத் தலைவர் திரு. மாயசந்திரன் அவர்கள், இம்மாதிரியான யோகா நிகழ்வின் வழியும் யோகா பயின்றும் மாணவர்கள் உடல் ஆரோக்கியம், மன அமைதி பெற்று கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவது மட்டும் இல்லாமல் யோகா பயில ஒரு தொடக்கமாகவும் மாணவர்கள் நேரத்தை நல் வழியில் செலவுச் செய்யலாம் என்றார்.
மலேசிய அருளொளி நற்பணி மாமன்றத்துடன் இணைந்து இம்மாதிரியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக பெருமிதம் கொள்வதாக சிறப்பு விருந்தினராக வருகை தந்த சுப்பையா ஐயா, அறிவித்தார்.
மேலும், மலேசிய அருளொளி நற்பணி மாமன்றம் பல்வேறு நிகழ்வுகளை நல்ல முறையில் நடத்தி வருவதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இம்மாதிரியான நிகழ்வுகள் மலேசிய வாழ் இந்திய மக்களுக்கு மிகவும் முக்கியம் என்பதை எடுத்துரைத்தார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் மலேசிய அருளொளி நற்பணி மாமன்றத்தின் ஜொகூர் மாநில கல்வி இலாகா ஒப்புதல் கூடிய நற்சான்றிதழ் வழங்கப் பட்டது.
மேலும் கடந்த 22/6/2025 ஞாயிற்றுக்கிழமை குவாந்தான் பகாங்கில், இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி ஆதரவுடன் ஏழாம் ஆண்டாக மிக சிறப்பாக பன்னாட்டு யோகா தினம் கொண்டாட பட்ட அதே வேளையில், கெடா கூலிமில் 11/7/2025 திகதியிலும் ஈப்போ பேராக்கில் 12/7/2025 நாளில் மலேசிய அருளொளி நற்பணி மாமன்றத்தினரால் நடத்தப்பட உள்ளது என்பமு குறிப்பிடத்தக்கது.



