
நாட்டின் அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுகளை எடுக்க கட்சி தலைவர், துணைத் தலைவர், மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை கோத்தா ராஜா தொகுதி நிறைவேற்றியது தொகுதி தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் அறிவிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஷா ஆலம், ஜூன் 21-
நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு மற்றும் முடிவைத் தீர்மானிக்க கட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மஇகா மத்திய குழுவிற்கு ம.இ.கா கோத்தா ராஜா தொகுதி முழு அதிகாரத்தை வழங்குவதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக்கோத்தா ராஜா தொகுதி தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் அறிவித்துள்ளார்.

இந்திய சமூகம் மற்றும் நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கான உத்திகளை வகுப்பதில் கட்சியின் உயர்மட்டத் தலைமை முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில் கட்சியின் தலைமை மீது அடிமட்ட மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையை இத்தீர்மானம் காட்டுவதாக சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவருமான டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் கூறினார்.
இந்த கோத்தா ராஜா தொகுதியின் ஆண்டு கூட்டத்திற்கு ம.இ.கா தலைவர்களின் வருகை கோத்தா ராஜா தொகுதியின் முயற்சிகள் மற்றும் சாதனைகளுக்கு உயர் தலைமையின் வலுவான ஆதரவை பிரதிபலிப்பதாக டத்தோ சங்கர் ராஜ் சொன்னார்.
இந்தப் ஆண்டு பொதுக் கூட்டத்தை சுமூகமாக நடத்தி வெற்றிபெறச் செய்ய அயராது உழைத்த மஇகா கோத்தா ராஜா தொகுதி உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், ஏற்பாட்டுக் குழுவினர்ளுக்கு டத்தோ சங்கர் ராஜ் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆழமான ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும்தான் அடித்தள மட்டத்தில் கட்சியின் வலிமைக்கு முதுகெலும்பாக அமையும். மதம், இனம் மற்றும் தாயகத்திற்கான கட்சியின் போராட்டத்தை இந்த உணர்வு தொடர்ந்து வலுப்படுத்தட்டும் என்று டத்தோ சங்கர் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோத்தா ராஜா தொகுதியின் 21ஆவது ஆண்டு கூட்டம் அண்மையில் மிகவும் சிறப்பாக ஒற்றுமை உணர்வுடன் நடைபெற்றது. இந்த ஆண்டு கூட்டத்தை செனட்டர் டத்தோ ஸ்ரீ எஸ். வேள்பாரி ROஆக தேசிய மஇகா பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளது இந்நிகழ்வை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக டத்தோ சங்கர் ராஜ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கூட்டத்தில் மேலும் சிலாங்கூர் மாநில மஇகாவின் துணைத் தலைவர் திரு. ஸ்ரீதரன் மாநில பிரதிநிதியாக கலந்து கொண்டார். மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர்கள், மஇகா கிளை தலைவர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில மஇகா உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



