
வெள்ளிரத ஊர்வலத்தில் பட்டாசு, வாணவெடிக்கை வெடிக்கைகளுக்கு போலீசார் தடை தான்ஸ்ரீ நடராஜா தகவல்
வெள்ளிரத ஊர்வலத்தில் பட்டாசு, வாணவெடிக்கை வெடிக்கைகளுக்கு போலீசார் தடை தான்ஸ்ரீ நடராஜா தகவல்
கோலாலம்பூர்:
பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிரத ஊர்வலத்தின் போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீசார் அறிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பரித்து சத்தமிட்டு முருக்கி செல்லக் கூடாது என்றும் மேலும் மது அருந்துவது, விற்பது செய்வது போன்ற நடவடிக்கைகள் இருக்கக் கூடாது எனவும் போலீசார் வலியுறுத்திள்ளனர்.
பத்துமலை தைப்பூச ரத ஊர்வலத்தின் போது இந்த 3 விவகாரங்களையும் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்னு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இதனை உறுதிப்படுத்தி கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளார்.
பத்துமலை தைப்பூச விழா, வெள்ளி ரத ஊர்வலம் குறித்து கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அலாவூதின் அப்துல் மஜித்துடன் தான்ஸ்ரீ நடராஜா பேச்சு நடத்தினார். செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர், டாங் வாங்கி போலீஸ் தலைவர் உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பக்தர்கள் இந்த விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்ர.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவக்குமாரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்நக்கது.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



