
ஈப்போ,
இன்றைய நவீனக் காலக்கட்பத்தில் காற்பந்து விளையாட்டை ரசிக்காதவர்கள் குறைவே எனலாம். பலருக்கு மகிழ்ச்சியே காற்பந்து விளையாட்டு தான். அந்த வகையில் காற்பந்து விளையாட்டாளர்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் அண்மையில் மகிழம்பூ வினோத் எப்.சி.யினர் ஒன்மர் பேர் காற்பந்து போட்டியை டி.ஆர்.சனிவாசகம் மைதானத்தில் சிறப்பாக நடத்தினர்.
இந்த போட்டியில் ஜோகூர், மலாக்கா, சிலாங்கூர் , பகாங்,கெடா, கிளந்தான், பினாங்கு,நெகிரி செம்பிலான், பெர்லீஸ், பேராக் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 51 காற்பந்து அணிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் டிராஸ் அணியினர் முதலாவது இடத்தை தட்டிச் சென்று 7080 வெள்ளியையும், சூழற்கிண்ணத்தையும் சொந்தமாக்கி கொண்டனர். இரண்டாவது இடத்தை தாப்பா தமிழாஸ் அணியினர் பெற்றனர். அவர்களுக்கு 5000 வெள்ளியும் வெற்றிக் கிண்ணமும் கிடைத்தது.
மேலும், எம்.ஆர்.எம்.ராஜ் அணி 3-ஆவது இடத்தையும் 4-ஆவது இடத்தை மகிழம்பூ வினோத் எப்.சி.யும் அடைந்தனர். தொடர்ந்து காலிறுதி சுற்றில் தகுதி பெற்ற டி அமான், மிக் பிரதர்ஸ் எப்.சி , கே.கே.பி. பிரதர்ஹூட் எப்.சி, டிரிம் திம் எப்.சி. ஏ. ஆகிய குழுவினருக்கு தலா 500 வெள்ளி பரிசு கிடைத்தது.
மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த போட்டி நிகழ்வில் வசந்தன் பிரதர்ஸ் அணியின் தலைவர், வசந்தன் சிறப்பு வருகை புரிந்தார்.
அதனுடன், மறைந்த வினோத் தாயார், அமுதராணி, அக்கா ரேணு, மாமா மதன், மகிழம்பூ ராஜா ராஜேஸ்வரி ஆலயத் தலைவர், அழகர்சாமி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டது மேலும் அனைவருக்கும் மகிழச்சியளித்தது.
இந்த காற்பந்து போட்டிக்கு ஐஸ்வர்யா ஆர்டிஸ்திரி & பிரைடல் அகடேமி, அருண்யாசினி திரேடிங், மெஸ்யாத்திரி எண்டர்பிரைஸ், கே.ஆர் ஸ்பிட் லோதிஸ்திக், எஸ்.பி. மகிழம்பூ திரேடிங், மகேன் குலோபல் ரிசோர்சஸ், மகிழம்பூ வினோத் பிரதர்ஸ் ஆகியோர் பெரும் ஆதரவு வழங்கினர்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



