Malaysia

துணையமைசர் சரஸ்வதிக்கு பதில் தந்தார் பிரதமர் அன்வார் பிரதமர் துறைக்கு மாறியது மித்ரா

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப். 3-

தேசிய ஒற்றுமை அமைச்சுக்கு கொண்டு வரப்பட்டு இழுபறி நிலையில் இருந்த மித்ரா இந்தியர் உருமாற்றப் பிரிவு மீண்டும் பிரதமர் துறைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது துணையமைச்சர் சரஸ்வதிக்கு பிரதமர் அன்வார் கொடுத்த சாட்டையடியாகும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்த மித்ரா பிரதமர் துறைக்கு வந்தால் மட்டுமே செயல்பட முடியும் என்பதை பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் தேசிய ஒற்றுமை அமைச்சின் பேச்சாளர் இந்த அறிவிப்பை செய்தார்.

ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முயற்சியில் சிரமப்பட்டு பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்ட மித்ரா மீண்டும் தேசிய ஒற்றுமை அமைச்சுக்கு மாற்றப்பட்டது. இதனால் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பல குளறுபடிகளை செய்து வேலை செய்ய விடாமல் தடுத்ததாக மித்ரா பணிக்குழு தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார்ர.
இந்நிலையில் மித்ரா பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button