
ம.இ.காவின் 2024-2027 தவணைக்கான தேசிய ம.இ.கா நிர்வாகத்தினர் நியமனம் தான்ஸ்ரீ எம்.ராமசாமி தேசிய உதவித் தலைவராக நியமனம் டத்தோ சிவக்குமார் நடராஜா பொருளாளர் ஆனார்
கோலாலம்பூர்,அக்.8-
ம.இ.காவின் 2024-2027 தவணைக்கான தேசிய ம.இ.கா நிர்வாகத்தினர் பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ம.இ.கா முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ம.இ.கா தேசிய உதவித் தலைவராக தான்ஸ்ரீ எம்.ராமசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேராக் மாநில ம.இ.கா தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தான்ஸ்ரீ ராமசாமி ஏற்கெனவே ம.இ.கா பொருளாளராக ஒரு தவணை பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் கெடா மாநில ம.இ.கா தொடர்பு குழுத்தலைவர் டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் ம.இ.காவின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் டத்தோ என்.சிவக்குமார் நடராஜா ம.இ.காவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ம.இ.காவின் தகவல் பிரிவு அதிகாரியாக
DATUK AK. RAMALINGAM நியமனம் செய்யப்பட்ட வேளையில் ம.இ.கா கட்டிட குழு தலைவராக
DATUK N. RAWISANDRAN நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில் DATO’ N. MUNEANDY தேசிய அமைப்புச் செயலாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் அந்த ம.இ.கா முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில் ம.இ.கா தேசிய வியூக அதிகாரியாக DATUK R. THINALAN நியமனம் செய்யப்பட்டுள்ளார். தினாளன் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் ஆவார். அதேசமயத்தில்
தேசிய ஊடக பிரிவின் தலைவராக திரு L. SIVA SUBRAMANIAM நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிர்வாக செயலாளராக DATUK DR. A.T. KUMARARAJAH நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த ம.இ.கா முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



