
India Gate உணவக உரிமையாளர் திரு.சரவணன் சுப்ரமணியம் சென்னையில் தேசம் ஊடகத்தின் சிறந்த Business Icon of the year விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
India Gate உணவக உரிமையாளர் திரு.சரவணன் சுப்ரமணியம் சென்னையில் தேசம் ஊடகத்தின் சிறந்த Business Icon of the year விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
மலேசிய உணவகத்துறையில் முத்திரை பதித்து வரும் India Gate உணவக உரிமையாளர் திரு.சரவணன் சுப்ரமணியம் சென்னையில் தேசம் ஊடகத்தின் சிறந்த Business Icon of the year விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
கோலாலம்பூர், டிச.19-
INDIA GATE உணவகம் என்றாலே மக்கள் மனம் கவர்ந்த சிறந்த உணவகமாகும். மக்களுக்கு குறிப்பாக INDIA GATE உணவகத்தை தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் உணவு வகைகளை தயார் செய்து வழங்கி வாடிக்கையாளர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள INDIA GATE உணவக உரிமையாளர் சரவணன் சுப்ரமணியம், சென்னையில் நடைபெற்ற Desam Media International Icon Award 2023 Chennai விருது விழாவில் மிகச்சிறந்த Business Icon of the year
விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பேராக் மாநிலத்தை சேர்ந்த சரவணன், கோலாலம்பூருக்கு வாய்ப்பு தேடி வந்த நிலையில் 2016 காய்கறி விநியோகம் செய்யும் வர்த்தகத் துறையில் ஈடுபட்டார். கோலாலம்பூரில் பல உணவகங்களுக்கு காய்கறி, பழங்கள் என்று 15 ஆண்டுகள் வரையில் விநியோகம் செய்து இத்துறையில் நிபுணத்துவம் பெற்றார். இந்நிலையில் உணவு துறையில் ஈடுபட ஒரு வாய்ப்பு கிட்டியது இவருக்கு.
இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு கடந்த 27/8/2017இல் சைபர்ஜெயாவில் முதல் India Gate உணவகத்தை திறந்து வெற்றிகரமாக நடத்தினார். இதன் காரணமாக ஐந்து ஆண்டுகளில் 4 உணவகங்களை திறந்து வெற்றி கண்டார். உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரகமந்திரத்தில் செயல்பட்டு இன்று மக்கள் போற்றும் நாயகனாக வலம் வருகிறார்.
இந்த 20 ஆண்டுகள் உணவக பயணத்தில் எத்தனை துன்பங்கள், துயரங்கள், போராட்டங்கள்? அனைத்தையும் கடந்து இன்று 7 உணவகங்களுக்கு உரிமையாளராக இருக்கிறார். இந்த 7 உணவகங்களை சம்பாதிக்க எத்தனை போராட்டங்களை கடந்து வந்திருப்பார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
தற்போது Cyberjaya, Puchong, Subang jaya
Bangsar, Klang
Seremban 2, Seminyih
ஆகிய இடங்களில் India Gate உணவகத்தை திறந்துள்ளார்.
வாடிக்கையாளர்களை கவரும் விதம்…தரமான உணவு சரவணன் வெற்றிக்கு காரணமாக உள்ளது. உணவகத்தின் அமைப்பு இந்திய பாரம்பரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உணவு சமைத்து வழங்கப்படும் விதம், அதனை தயார் செய்து பரிமாறும் விதம் ஆயிரக்கணக்காண வாடிக்கையாளர்களை அள்ளிக் குவித்தது. இதன் வெற்றியே ஒன்று இரண்டாகி முன்றாகி இன்று ளழாகி நிற்கிறது. ஏழு இன்னும் படிப்படியாக துளிரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
India gate உணவகம் அமைந்துள்ள பங்சார், பூச்சோங், கிள்ளான், சிரம்பான் 2, செமினி, சைபர்ஜெயா, சுபாங் ஜெயா ஆகிய பகுதிகளில் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.
INDIA GATE நிறுவனம் உணவகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்குவதன் காரணமாகவே பலர் மீண்டும் மீண்டும் வருகிறார்கள். இந்த வருகையே பல உணவகங்கள் உருவாகின.
INDIA GATE உணவகம் தொடர்ந்து வெற்றி நடை போட தேசம் ஊடகம் சரவணன் சுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ள Business Icon of the year விருது ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் என்று தேசம் ஊடக குழுமம் நம்புகிறது



