
ஈப்போ ராஜேஸ் உணவக உரிமையாளர் ராஜேஸ்வரி சுப்ரமணியம் women Entrepreneur of the year விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
ஈப்போ ராஜேஸ் உணவக உரிமையாளர் ராஜேஸ்வரி சுப்ரமணியம் women Entrepreneur of the year விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
கோலாலம்பூர், டிச.19-
கடந்த டிசம்பர் 2ஆம் நாள் தேசம் ஊடக குழுமம் சென்னையில் நடத்திய Desam Media International Icon Award 2023 விருது விழாவில் ஈப்போ ராஜேஸ் உணவக உரிமையாளர் திருமதி ராஜேஸ்வரி சுப்ரமணியம் women Entrepreneur of the year விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சமூகவலைத்தளமாக Tiktokகில் மிகவும் பிரபலமான ராஜேஸ்வரி ஈப்போவில் பல ஆண்டுகளாக ராஜேஸ் உணவகத்தை நடத்தி வருகிறார். உணவகம் மட்டுமன்றி கேட்டரிங் சேவை, திருமண அலங்கார சேவை என்று திருமணம் மற்றும் அனைத்து விழாக்கால சேவைகளையும் மேற்கொண்டு வரும் ராஜேஸ்வரிக்கு சரியான தருணத்தில் தேசம் ஊடகம் சென்னையில் women Entrepreneur of the year விருது வழங்கி கௌரவிப்பு நல்கப்பட்டுள்ளது.
திருமதி ராஜேஸ்வரி கடந்த காலங்களில் பல சேவைகளை வழங்கி வந்துள்ளார். இதில் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்துள்ளார். பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி நல்கியுள்ளார். முதியோர் இல்லங்களுக்கு உணவு விநியோகம் செய்துள்ளார். இப்படி பல சேவைகளை மக்களுக்கு வழங்கியுள்ள ராஜேஸ்வரி ஈப்போவில் ராஜேஸ் உணவகத்தை நடத்தி வருகிறார்.
இதனூடே ராஜேஸ்வரி திருமண முன்னேற்பாடுகளையும் தனது Rajes Deco sdn Bhd நிறுவனம் வழி நடத்தி வருகிறார். அதேநேரத்தில் Banquet Hall சேவையையும் வாடகைக்கு வழங்கி வருகிறார். திருமணம் அல்லது விழாக்களை நடத்த விரும்பும் மக்கள் Ipoh sentrac Banwuet Hall வாடகைக்கு பெறலாம். இப்படி பல்துறை வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் ராஜேஸ்வரிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் பல விருதுகள் கிடைத்துள்ளன.
MAJALAH PENGHARGAAN INDONESIA விடம் இருந்து Best Inspiring and Creativity Women Award 2023 விருது கிடைத்துள்ளது. மேலும் Asean Wedding Decor & Service Excellence 2023 விருது, Best Wedding Decor 2020 ( Rajes Deco) from Samyukta South Asian Wedding Industry Award (Canada), Best Culture Preservation Awards 2022 from Indian Culture Association Tamilnadu ,India and London ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார் ராஜேஸ்வரி.
அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற Desam Media International Icon Award 2023 விருது விழாவில் திருமதி ராஜேஸ்வரிக்கு women icon of the year விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ராஜேஸ்வரி மேலும் பல விருதுகள் பெறவும் தனது வர்த்தகத்தில் உயரவும் இந்து தேசம் விருது ஒரு பாலமாக இருக்கும் என்று நம்புகிறோம். ராஜேஸ்வரிக்கு தேசம் ஊடகத்தின் வாழ்த்துகள்.



