Malaysia

இந்தியர் வணிகத் தளங்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு ஏன்? நம்பிக்கை இயக்கத் தலைவர் டத்தோ கலைவாணர் கேள்வி

கோலாலம்பூர், ஏப்.18-

இந்திய பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்கின்றவர்கள் தமிழ்மொழி மீது அக்கறை காட்டுவதில்லை என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் சாடியுள்ளார்.

வணிகத் தளங்களின் பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தமிழ்மொழியின் சிறப்பை வணிகர்கள் உணர வேண்டும். தமிழ் உணர்வு இருக்க வேண்டும். அந்த வகையில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் லிட்டல் இந்தியா போன்ற வணிகத் தளங்கள் அதிகம் உள்ளன. இந்த வணிகத் தளங்களின் உள்ள கடைகள் இந்தியர்களுக்கு சொந்தமாகும். வாடிக்கையாளர்களும் இந்தியர்கள்தான்.
ஆனால், அந்த கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ்மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக டத்தோ கலைவாணர் தெரிவித்தார்.

பெயர் பலகையில் தமிழ்மொழியை போடக் கூடாது என எந்தவொரு தடையும் இல்லை. இருந்தாலும் கடைகளின் உரிமையாளர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழுக்குதான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆகவே வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ கலைவாணர் சொன்னார்.

தமிழ் இல்லாத கடைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல.
காரணம் அவர்களுக்கும் குடும்பமும் தொழிலாளர்களும் உள்ளனர். ஆகையால், சம்பந்தப்பட்ட வணிகர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார் டத்தோ கலைவாணர்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button