Malaysia

சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய தொழிலியல் வர்த்தக சம்மேள சங்கத் தேர்தல் தலைவர்,துணைத் தலைவர், உச்சமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு கடுமையான போட்டி நிவாஷ் ராகவன் – வி கே. கே. ராஜசேகரன் அணியினர் நேரடி போட்டி

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர் ஏப்ரல் 18-

மலேசியாவில் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளன சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், உச்சமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் கடுமையான போட்டி நிலவியுள்ளது.

KLSICCI சம்மேளன சங்கத்தின் நடப்பு தலைவர் நிவாஸ் ராகவன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடப்பு துணை தலைவர் வி.கே.கே. ராஜசேகரன் போட்டியிடுகிறார் .

இந்நிலையில் நிவாஸ் ராகவன் அணியின் சார்பில் துணை தலைவர் பதவிக்கு குமரகுரு போட்டியிடும் வேளையில் ராஜசேகரன் அணி சார்பில் பிரபாகரன் போட்டியிடுகிறார்.
உதவித் தலைவர் பதவிக்கு நிவாஸ் அணி சார்பில் டத்தோ சந்திரசேகரனும் ராஜசேகரன் அணி சார்பில் பன்னீர் செல்வமும் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு நிவாஸ் ராகவன் அணி சார்பில் டத்தின் மகேஸ்வரியும் ராஜசேகரன் அணி சார்பில் செல்வராஜும் போட்டியிடுகிறார்கள்.
டத்தின் மகேஸ்வரி நடப்பு பொருளாளர் ஆவார் .

சங்கத்தின் 14 உச்சமன்ற பதவிகளுக்கும் இரு அணிகள் சார்பில் கடும் போட்டி நிலவுகிறது.
நிவாஸ் ராகவன் அணி சார்பில் ராம்குமார், குணராஜ்,சண்முக செல்வி,மோகனா சின்னத்தம்பி, முகமட் ராபி, எம்.பி.இராமன், பிரபாகரன் கோவிந்தன்,செல்வராசு ஹரிகிருஷ்ணன், கவிவாணன் சுப்பிரமணியம், கவிமாறன், நாகராஜன்,அமுதா முனியாண்டி, ராம்குமார், பெருமாள் இராமன் ,குளோரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் நவமணி, டாக்டர் சித்ரா, பால்மிரா பிபி, டத்தோ டாக்டர் சுகுமாறன், டாக்டர் ராஜசேகரன் மோகன், டத்தோ சி.எம். விக்னேஸ்வரன் , டாக்டர் மரியா ரூபினா, பிரவின் தமிழ் செல்வம், குட்டி கிருஷ்ணன் ராயர், டோனி கிளிபெர்ட், , மீனாட்சி கல்யாண சுந்தரம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஜமுனா என்பவர் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

KLSICCI சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் தேர்தல் ஏப்ரல் 28 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நடைபெறவிருப்பதாக தேர்தல் குழு தலைவர் ராஜசுந்தரம் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button