Malaysia

புதிய தொடக்கம் புத்தாண்டு; சித்திரையில் முத்திரை பதிப்போம் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்.14-

இன்றைய தினம் சித்திரை புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

புத்தாண்டு என்பது புதிய தொடக்கம் என்பது போல. அது சிறப்பாக அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம். அந்த வகையில் இந்த புத்தாண்டையும் மகிழ்ச்சியாக சிறந்ததொரு எதிர்காலத்தைக் குறிவைத்துக் கொண்டாடுவோம் என்று டத்தோஸ்ரீ் சரவணன் கேட்டுக் கொண்டார்.

இந்தியர்கள் நாம் பல்வேறு மொழிகளையும், பண்டிகைகளையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து வந்தாலும், நமக்குள் நாம் இந்தியர் எனும் உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நாம் ஒற்றுமையாக இருப்பதே நமக்குப் பலம்.

நம்மிடையே சிந்தனை மாற்றங்கள் தேவை. நம்மைச் சுற்றி நல்ல எண்ணங்களும், செயல்பாடுகளும் இருத்தல் அவசியம்.

நம் வாழ்வை செழிப்பாக நாம் முயற்சி செய்து கொண்டே இருப்போம்.

“முயற்சி திருவினையாக்கும்” என்பது எந்நாளும் பொய்த்ததில்லை. வள்ளுவனின் கூற்றுப்படி,

    “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

   மெய்வருத்தக் கூலி தரும்” – குறள் 619

ஒருவனின் முயற்சிக்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு இந்த புத்தாண்டில் காலடி வைப்பொம்.

மீண்டும் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக மலரட்டும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button