Malaysia

வெள்ளம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட மாரான் மரத்தாணடவர் ஆலயம் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் ஆலய செயலாளர் ஜெயேந்திரன் ஜெயராமன் தகவல்

மாரான், ஜன.10-

வெள்ளம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட மாரான் மரத்தாணடவர் ஆலயம் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி பக்தர்களுக்கு மீண்டும் திறக்கப்படுவதாக ஆலய செயலாளர் ஜெயேந்திரன் ஜெயராமன் கூறினார்.

கடந்த சில தினங்களாக பெய்த மழையில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. ஆலயத்திற்கு உள்ளே இரண்டரை அடி உயரத்திற்கும் வெளிப்புறத்தில் ஐந்தடி வரையிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இந்நிலையில் ஆலய நிர்வாகம் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்யப்பட்ட ஆலயம் ஜனவரி 10ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக ஜெயேந்திரன் தெரிவித்தார்.

தைப்பூசத்தை முன்னிட்டு மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு பக்தர்கள் பலரும் வருகை தர எண்ணியிருப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு மூன்று நாட்கள் மூடப்பட்ட ஆலயம் மீண்டும் திறக்கப்படுகிறது. பக்தர்கள் மேல்விவரங்களுக்கு ஆலய நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அண்மையத் தகவலை தெரிந்து கொள்ளலாம் என்று ஜெயேந்திரன் சொன்னார்.

மாரான் மரத்தாண்டவர் ஆலயம் வெள்ளம் காரணமாக கடந்த ஜனவரி 8 தொடங்கி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஆலயம் 3 நாட்கள் பக்தர்கள் வழிபாட்டிற்கு மூடப்பட்ட நிலையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று ஜெயேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புக்கு

டத்தோ தமிழ்ச்செல்வன்- 019-9698349

அல்லது ஆலய அலுவலகம்-019-8238050

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button