அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இப்போதே தாக்கல் செய்யுங்கள், பாசீர் கூடாங் எம்பி வலியுறுத்து
கோலாலம்பூர், ஜன.10-
நாட்டின் நாடாளுமன்ற மக்களவை கூட்டம் அடுத்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பே
அன்வாருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யுங்கள் என்று
பாசீர் கூடாங் எம்பி ஹசான் கரிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பிரேரணை மக்களவை கூடுவதற்கு முன்பாகவே தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 43(4) பிரிவின் அடிப்படையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்றும் மக்களவை மீண்டும் கூடுவதற்கு முன்பு சபாநாயகரிடம் இதனை அனுப்பலாம் என்றும் ஹசான் கரீம் கூறினார்.
மக்களவை அடுத்த பிப்ரவரி 26 ஆம் தேதி மீண்டும் கூடுவதற்கு முன்பு, பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக உடனடியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“துபாய் நகர்வு” குறித்து கருத்து தெரிவித்த பாசிர் கூடாங் எம்.பி ஹசான் கரீம், அன்வாரின் பிரதமர் பதவி ஆதரவை சோதிக்க விரும்பினால் பெரிகாத்தான் நேஷனல் இதில் தீவிரமாக இருக்க வேண்டும் அவர் என்று சொன்னார்.
கூட்டாட்சி அரசியலமைப்பின் 43(4) பிரிவின் அடிப்படையில் இந்த பிரேரணையை கொண்டு வர முடியும் என்றும், அமர்வு தொடங்குவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாகவே மக்களவை சபாநாயகரிடம் அனுப்பப்பட வேண்டும் என்றும் ஹசன் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சிகள் இதில் தீவிரமாக இருந்தால் இப்போது ஒரு பிரேரணையை தாக்கல் செய்யலாம். இது பிப்ரவரி 27 அன்று தாக்கல் செய்யப்படலாம் என்று ஆங்கில இணையதளத்திடம் ஹாசன் கூறியதாக செய்தி வெளிவந்துள்ளது.
அன்வாரின் ஆதரவை சோதிக்க சிறந்த வழி மக்களவையாகத்தான் இருக்கும் என்று வழக்கறிஞர் பாஸ்டியன் பயஸ் வெண்டர்கோன் கூறியதாக அந்த ஆங்கில இணையத்தளம் தெரிவித்தது.
“துபாய் நகர்வு” என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே அன்வாரின் நிர்வாகத்தைக் கவிழ்க்க நடந்ததாகக் கூறப்படும் பேச்சுக்களைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.