
மாரான் மரத்தாண டவர் ஆலயம் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக மூடப்படுகிறது தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் அறிவிப்பு
மாரான், ஜன.8-
வெள்ளம் காரணமாக மாரான் மரத்தாண டவர் ஆலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதன் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்த மழையில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆலயத்திற்கு உள்ளே இரண்டரை அடி உயரத்திற்கும் வெளிப்புறத்தில் ஐந்தடி வரையிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு பக்தர்கள் பலரும் வருகை தர எண்ணியிருப்பார்கள். நீங்கள் ஆலயத்தை முதலில் தொடர்பு கொண்டு அண்மையத் தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோ தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டார்.
மாரான் மரத்தாண்டவர் ஆலயம் வெள்ளம் காரணமாக ஜனவரி 8 தொடங்கி தற்காலிகமாக மூடப்படுகிறது. ஆலயம் 3 நாட்கள் பக்தர்கள் வழிபாட்டிற்கு மூடப்பட்டிருக்கும். ஆலயத்திற்கு வரும் பட்சத்தில் வெள்ளம் ஏற்பட்டு விட்டால் பக்தர்கள் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளும்படி டத்தோ தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 9ஆம் தேதி ஆலயம் கும்பாபிஷேகம் கண்டது. ஆலயம் சற்று உயரமாக கட்டப்பட்டிருந்தாலும் அதையும் மீறி வெள்ளம் புகுந்து விட்டது. இந்த வெள்ளம் குறித்த தகவல்களை ஆலய Website வழி தெரிந்து கொள்ளலாம் .
இந்த வெள்ளப்பிரச்சினை தொடர்பில் மாநில, மத்திய அரசாங்கம் நிரந்தர தீர்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாரான் மரத்தாண்டவர் ஆலய தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டுள்ளார்.




