
February 17இல் Hello Creative நிறுவனத்தின் The Legend Hariharan Live in Concert இசை நிகழ்ச்சி
பினாங்கு, ஜன.5-
Hello Creative நிறுவனத்தின் ஏற்பாட்டில் February 17ஆம் தேதி Pinang Spice Arenaவில் நடைபெறவுள்ள The Legend Hariharan Live Concert இசை நிகழ்ச்சியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவிருப்பதாக திரைப்பட பாடகர் ஹரிஹரன் உறுதியளித்துள்ளார்.
கடந்த January 3ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு Pinang லிட்டில் இந்தியா வளாகத்தில் திரைப்பட பாடகர் ஹரிஹரன் ரசிகர்களை சந்தித்து பேசினார். இதில்
Hello Creative நிறுவனத்தின் தோற்றுநர் திரு.சிவமணி பாடகர் ஹரிவரனுடன் கலந்து கொண்டார்.
பாடகர் ஹரிஹரனிடம் பல்வேறு கேள்விகளை ஊடகவியலாளர்கள் முன் வைத்தனர். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவிருப்பதாகவும் ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை பாடல்களும் தனக்கு பிடிக்கும் என்றும் ஹரிஹரன் தெரிவித்தார்.
பினாங்கு லிட்டில் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. Feb 17 தேதி நடைபெறவுள்ள பாடகர் ஹரிஹரன் கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக திரு சிவமணி சொன்னார்.
பாடகர் ஹரிஹரன் இரண்டு பாடல்களை பாடி மக்களை மகிழ்ச்சிப்படுத்தினார் இந்நிகழ்ச்சியை கவிமாறன் சிறப்பாக வழிநடத்தினார், இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு வர்த்தக சங்கத் தலைவர் Dato பார்த்திபன், காரசாரம் உணவக உரிமையாளர் திரு ஸ்ரீதரன், Kedah மாநில ம.இ.கா தலைவர் Dato ஆனந்தன் மற்றும் பல பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பினாங்கு மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காரசாரம் உணவகத்தில் ஹரிஹரனுக்கு உணவும் பரிமாறப்பட்டது. இந்த வேலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிவமணி ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.



