
Malaysia
தீபாவளி ஒளியின் அழகு இன்னும் உணரப்படுகிறது! அமைச்சர் சிவகுமார் பெருமிதம்
தீபாவளி ஒளியின் அழகு
இன்னும் உணரப்படுகிறது!
அமைச்சர் சிவகுமார் பெருமிதம்
பெருவாஸ், நவ 18-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
நேற்றிரவு Pusat Khidmat Rakyat Parlimen Beruas DUN Pantai Remis ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
Beruas மற்றும் Pantai Remis மக்களைக் கொண்டாடும் இந்த விழா அமைந்திருந்தது.
உண்மையில் மலேசியாவில் உள்ள இனங்களின் பன்முகத்தன்மையை இது பிரதிபலிக்கிறது.
மேலும் தீபாவளி ஒளியின் அழகு இன்னும் உணரப்படுகிறது என்று அவர் சொன்னார்.
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Ngeh Koo Ham, பந்தாய் ரெமிஸ் சட்டமன்ற உறுப்பினர் Wong May Ing, பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Ngeh Koo Ham பொது உபசரிப்பை நடத்தி வருகிறார்.




