MalaysiaPolitics

இன,மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்குவோம் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சீனப்புத்தாண்டு வாழ்த்து!!!

கோலாலம்பூர்,பிப்.16- இந்நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு கொண்டாட்டங்களும் ஒருவரின் மதம், இனம் சார்ந்தத ஒன்றாக இருந்தாலும் அது நல்லிணக்கத்தோடு கொண்டாடப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சீனப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார். மலேசிய சீன சமுதாய மக்ககளுக்கு முதலில் எனது சீனப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மலேசியா என்றாலே அது பல்லின மக்களையும் பல்லின கலாச்சாலத்தையும் பல்வேறு மதங்களையும் கொண்ட நாடு என்பது உலக நாடுகளுக்கும் அது சார்ந்த மக்களுக்கும் நன்றாக தெரியும். அந்த வகையில் மலேசியாவை பொருத்தவரையில் அனைத்து மதங்க்களையும் சார்ந்த மக்கள் கொண்டாடும் விழாக்க்கள் தேசிய அளவில் அனைவரும் கொண்டாடும் ஒரு விழாவாகவே கருதப்படுவதால் நமது பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் அனைத்து விழாக்களும் மத நல்லிசக்கத்தோடு கொண்டாடப்பட வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார். நமது தேசத்தின் வண்ணமயமான கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகத் திகழும் சீனப் புத்தாண்டுப் பெருநாளை சீனர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் மத நல்லிணக்கத்தோடு கொண்டாடும் ஒரு விழாவாக சீனப்புத்தாண்டு இருக்க வேண்டும். மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணையும் ஒரு விழா சீனப் புத்தாண்டு.  மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் சீனச் சமூகம் வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது.  வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது பலம். இந்தப் புத்தாண்டு, நம்மிடையே நிலவும் சகோதரத்துவத்தையும், ஒருவருக்கொருவர் காட்டும் மாரியாதையையும் மேலும் வலுப்படுத்தும் என்று தான் நம்புவதாக தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் சொன்னார். இந்தக் ‘குதிரை’ ஆண்டில் (Year of the Horse), ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும், ஆரோக்கியமும் பொங்கி வழியட்டும். துரிதமான வளர்ச்சியும், நிலையான அமைதியும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறையட்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். மலேசியச் சீனப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த சீனப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். “Gong Xi Fa Cai!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button