Malaysia

இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் தரமானதா?

இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் தரமானதா?

இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் தரமானதா?
மறுபயனீடு செய்யப்பட்டுள்ள அந்த மடிக்கணினிகள் பயன்பாட்டிற்கு உகந்ததா?
இல்லை என்கிறார்
புக்கிட் கெமுனிங்
எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் -ஆசிரியர் சங்கத் தலைவர்
கி.தயாளன் கிருஸ்ணசாமி

ஷா ஆலம், டிச.22-
இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று புக்கிட் கெமுனிங்
எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் -ஆசிரியர் சங்கத் தலைவர்
கி.தயாளன் கிருஸ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு 30 லட்சம் வெள்ளி செலவில் 6 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மறுபயனீடு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்த மடிக்கணினிகள் புண்ணியமில்லாத ஒன்று என்று ஷா ஆலமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தயாளன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்தியர் உருமாற்றப் பிரிவு மித்ரா நடவடிக்கைக் குழுவுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் நியமிக்கப்பட்டு பல திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் உள்ள 525 தமிழ்ப் பள்ளிகளுக்கு 6000 மடிக்கணினிகள் மித்ரா மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக மித்ரா 3 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு இந்த மடிக்கணினிகள் பயன்படுத்தப்படும் திட்டம் வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும் அதற்கான உபகாரணங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்று தயாளன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மடிக்கணினி ஒரு தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளாகும். அதனுடன் ‘Chrome flex’ மென்பொருளோடு வழங்கப்படிருக்கின்றது. இந்த மென்பொருள் பாட திட்டம் நமது மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும். ஆனால் இந்த குறிப்பிட்ட பாட திட்டமானது பள்ளிகளிலேயேதான் செயல் படுத்த முடியுமே தவிர மாணவர்கள் அவர்களின் இல்லங்களில் இருக்கும் கணினிகளில் இந்த பாட திட்டத்தை மீள்பார்வை செய்யவோ மறுபடியும் முயற்சி செய்து பார்க முடியாத ஒரு பாட திட்டமாகும்.

இந்த பாட திட்டம் பயன்படுத்த ‘WIFI’ இணைப்பு மிக அவசியமானதாக இருக்கிறது. ஆனால் பல பள்ளிகளில் இந்த ‘WIFI’ இணைப்பு இருந்தாலும் கூட ஒரே நேரத்தில் பல கணினிகளை இணைப்பது சிரமமாக உள்ளது ஏனெனில் நமது தமிழ்ப்பள்ளிகளில் ‘WIFI’ இணைப்பு சம சீராக இல்லாமலும் சில பள்ளிகளில் இந்த வசதி வாய்ப்பும் கூட கிடையாது.

இந்த மடிக்கணினி தொடக்க பள்ளிமாணவர்களுக்கு தேவையானதா என்பதை முதலில் நாம் ஏற்று கொள்ள வேண்டும். ஏனெனில் மடிக்கணினி என்பது மிகவும் மென்மையாக கையாள கூடிய ஒரு பொருளாகும். இதை மாணவர்கள் கையாளும் பொழுது தவறி கிழே விழுந்தால் மிக சுலபமாக பழுதாவற்கு வாய்ப்புகள் உண்டு. ஆதலால் இதனுடைய பராமரிக்கும் செலவுகளும் அதிகமாகும்.

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அடித்தட்டு மக்கள் தொடங்கி பி40, எம்40 உட்பட சிறுவணிகர்கள், உயர்கல்விக்கழக மாணவர்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆகியோரின் மறுமலர்ச்சிக்காக மித்ரா மூலம் ஒதுக்கப்பட்ட மானியம் பயன்படுத்தாவிட்டால் அது மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்படும் என்பதற்காக அருணாச்சலம் திரைப்படம் போல் 30 நாளில் 30 கோடி செலவு செய்தால், 3 ஆயிரம் கோடி கிடைக்கும் என்ற பாணியில் மித்ராவின் நிர்வாகிகள் கண்மூடிதனமாக செலவு செய்ய கூடாது என்று தயாளன் அறிவுறுத்தினார்ர.

பெற்றோர்களாகிய நாங்கள், முதலில் அடிப்படை கணினி பாட திட்டத்தை முழு இணைய வசதியுடன் மாணவர்களுக்கு போதிக்க அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இதே போலதான் கடந்த காலங்களில் மித்ரா மூலமாக பெற பட்ட உதவி பொருட்கள் தரமானதாக இல்லை என்பதை இந்த உரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். உதாரணத்திற்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலமாக பெற பட்ட மேஜை , நாற்காலிகள் ஓராண்டுக்கு மேல் பயன் படுத்த முடியாமல் போகிறது. ஏனெனில் அந்த தளவாட பொருட்கள் தரமானதாக இல்லாததால் ஒரு குறுகிய காலகட்டத்தில் உடைந்து பயன்பாட்டிற்கு இல்லாமல் போகிறது.

மித்ரா எங்களுக்கு தரமான பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்கவும் மற்றும் தரம் அற்ற உதவி பொருட்களை அதிகம் வழங்குவதற்கு பதிலாக சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் கூட அது தரமானதாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய கூற்று.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மித்ராவின் பணம் சரியாகவும் முறையாகவும் நம் சமுதாயத்திற்கு சென்று அடைய வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள். அதுமட்டுமில்லாமல் நம் இந்திய சமுதாயத்திற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் எம் மாதிரியான உதவிகள் வேண்டும் என்பதனை சம்பந்தப்பட்ட இயக்கங்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பது சாலச் சிறந்ததாகும்.

கல்வியின்றி இச்சமுதாயத்தைக் கரை சேர்க்கவே முடியாது என்று ஆணித்தரமான கருத்துடன் இந்திய சமுதாயத்திற்குச் சேவையாற்றும் பல இயக்கங்கள் இருந்தாலும்கூட நமது நாட்டில் உள்ள அத்தணை தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஒரு பிரதிநிதி இயக்கம் கிடையாது என்பது வருத்தமளிக்கிறது. பிரதமர் அமைத்த பணிக்குழு, அறிந்த நோய்க்கு கையிலிருக்கும் மருந்தைக் கொடுப்பதை விட்டு, அவதிப்படும் நோயாளியைக் காப்பாற்ற மருந்து ஆராய்ச்சிக்கு குழுவை அமைத்துள்ளேன் என்று கூறுவதற்கு ஒப்பாகும். தமிழ்ப்பள்ளிகளின் விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், அதனை அழிக்க மேற்கொள்ளப்படும் அரசியல் யுக்தியே என்பதனை அனைவரும் மறுக்கவோ மறக்கவும் கூடாது என்று தயாளன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் டத்தோ ரமணன் அவர்களின் அதிகாரிகள் சிலரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button