
புது டெல்லி, டிச.20-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.12,659 கோடியை வழங்க கொண்டுள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்த ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியுள்ளார்.
குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதனால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரணம் கோரினார்.
தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமரிடம் ஸ்டாலின் விவரித்தார்.
தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அவசர நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை விரைந்து வழங்குமாறும் பிரதமரை ஸ்டாலின் வலியுறுத்தினார்



