MalaysiaOthers

தை மாதத்தை வரவேற்கும் வகையில் ஈப்போ கல்லுமலை

தை மாதத்தை வரவேற்கும் வகையில் ஈப்போ கல்லுமலை

தை மாதத்தை வரவேற்கும் வகையில் ஈப்போ கல்லுமலை குகை முருகன் கோவிலில் மாபெரும் “ஷண்முகப்பிரியா சமர்ப்பணம்” சாதனை நிகழ்வு நடைபெறவுள்ளது
ஈப்போ சப்தஸ்வர சங்கீதலாயா இசைக்கல்லூரி பெரும் முயற்சி

ஈப்போ, டிச
இன்று சினிமா பாடல்களின் இருக்கும் மோகம், ஆசை தெய்வீக பாடல்களில் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. அந்த வகையில் நம்முடைய மாணவர்களுக்கு முறையான பாரம்பரிய சங்கீதத்தை போதித்து வரும் ஈப்போ சப்தஸ்வர சங்கீதலாயா இசைக்கல்லூரி வரும் டிசம்பர் 25-ஆம் தேதியன்று தை மாதத்தை வரவேற்கும் பொருட்டும், தைப்பூசத்தை முன்னிட்டும் ” ஷண்முகப்பிரியா சமர்ப்பணம்” எனும் முருகப் பாடல்கள் படிக்கும் நிகழ்ச்சியை செய்யவிருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் பெரும் சிறப்பு என்னவென்றால் குன்றின் மேவ் இருப்பவன் நம் தமிழ்க்கடவுள் முருகன் என்பதற்கேற்ப ஈப்போ குகை முருகன் கோவில் குகை எதிரொலியில் 9 நவரத்தினங்கள் போன்று கீர்த்தனைகள் பாராயணம் செய்யப்படுகின்றன என ஈப்போ சப்தஸ்வர சங்கீதலாயா இசைக்கல்லூரியின் தோற்றுநர், சங்கீத ஆசிரியர்  யமுனா ஆறுமுகம் தேவன் செய்தியாளரிம் கூறினார்.

மாணவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து படிக்கும் பாடல்களுக்கு தப்லா, மிருதங்கம் என இரண்டு இசை கருவி மட்டுமே குகையினுள் வாசிக்கப்படும். இது ஓர் அற்புதமான நிகழ்வு பட்சத்தில் காலை 9 மணி தொடங்கி காலை 11 மணி வரை அப்பாடல்கள் முருகனுக்காக சமர்ப்பணம் செய்யப்படும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் சங்கீதம் போதிக்கும் என்பதை இந்த நிகழ்வு புலப்படுத்துகிறது.

இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் முருகப் பக்தர்கள், மக்கள் 010-3970264 என்ற எண்களுக்கு அழைக்கலாம். இந்த நிகழ்வு இலவசமாக செய்யப்படுவதால் அனைவரும் அழைக்கப்படுகின்றனர் என அவர் கூறினார்.

இதில் சுமார் 200 பங்கேற்பாளர்கள் இடம் பெறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button