
இந்திய வணிகர்களின் மேம்பாட்டிற்கு வித்திட வேண்டுமானால் தெக்கூன் வழி இந்திய வணிகர்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட வேண்டும் மைக்கி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோரிக்கை
கோலாலம்பூர், ஜன.20-
உலக நாடுகள் 4.0 தொழில்புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதால் இந்திய மாணவர்களும் இளைஞர்களும் அத்துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் குலசேகரன் கோரிக்க விடுத்துள்ளார்.
கைத்திறன் தொழிலில் நன்கு கற்றுதேர்ந்து அதில் நிபுணத்துவம் பெறுவோருக்கான வேலை வாய்ப்பு சந்தை விரிந்து கிடக்கிறது. உலகெங்கும் தற்போது கைதிறன் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே கிடக்கின்றன என்று குலசேகரன் என்று கைத்தொழில் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போது குலசேகரன் அவ்வாறு கூறினார்.
மலேசியாவில் திவேட் திட்டங்கள் வாயிலாக பல்வேறு பயிற்சிகளும் செயல்பாடுகளும் நாட்டில் இயங்கி வருகின்றன. அதில் நம் மாணவர்களும் இளைஞர்களும் கலந்து தங்களுக்கான எதிர்காலத்தை நம்பிக்கையான தடத்தில் அமைத்து கொள்ள வேண்டும்.
இந்த திவேட் திட்டம்,அதன் செயல்பாடு குறித்து ஆலோசனை வழங்கவும் பயிற்சிகளில் இணையவும் பயிற்சிகள் குறித்த தெளிவுகளுக்கும் விளக்கம் கொடுக்க தாம் தயாராகவே இருப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் அமைச்சர் கோபிந்த் சிங், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கணபதிராவ், பிரபாகரன், யுகனேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் வசந்தி உட்பட அரசு சாரா இயகத்தை சேர்ந்தவர்களும் பொது இயக்கத்தினரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



