
இந்திய சமுதாயம் ஒற்றுமையை கடைபிடித்தால் கேட்டதை எளிதில் பெற முடியும் டத்தோ ரமணன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜன.20-
இந்திய சமுதாயம் ஒற்றுமையை கடைபிடித்தால் நாம் கேட்டதை எளிதில் பெற முடியும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வர்த்தகர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது எனது கடமை. இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்று ஜாலான் டூத்தாவில் அமைந்துள்ள மைக்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் உரையாற்றுகையில் டத்தோ ரமணன் அவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர்கள் இல்லை. இதனால் சமுதாயத்தின் பிரச்சினை அமைச்சரவைக்கு சென்று சேராது. குறிப்பாக இந்திய வர்த்தகர்களின் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எல்லாம் பரவலாக உள்ளது என்பதை டத்தோ ரமணன் மறுக்கவில்லை.
இந்திய சமுதாயம், வணிகர்கள் என யார் பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் அது குறித்து கேள்வி எழுப்ப நான் தயாராக உள்ளேன். ஆனால், இந்திய சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுதான் தனது கோரிக்கை என்றார் டத்தோ ரமணன்.
இந்திய வர்த்தகர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என மைக்கி கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையை தாம் பிரதமரிடம் கொண்டு செல்வ டத்தோ ரமணன் உறுதியளித்துள்ளார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



