
தமிழ்ப்பள்ளியில் பிள்ளைகளை சேர்ந்த பெற்றோர்களுக்கு பாராட்டு, வாழ்த்து… கோலக்கங்சார் மாவட்ட ஒன்பது தமிழ்ப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் புத்தகப்பை அன்பளிப்பு
கோலகங்சார், மார்ச் 11-

நாடு தழுவிய நிலையில் 2024-2025ஆம் ஆண்டு கல்வி ஆண்டு தொடங்கிய வேளையில் கடந்த 11.3.2024ஆம் நாள் பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகள் இனிதே தொடங்கியது.

பெற்றோர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகள் மீது அக்கறை கொண்டு தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த வேளையில்
மாணவர்களைத் தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்த பெற்றோர்களுக்கு ம.இ.காவின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன நன்றி கூறினார்.
கோலக்கங்சார் மாவட்டத்திலுள்ள ஒன்பது தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்களுக்கு தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் புத்தகப்பைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
திரு.வீ.சின்னராஜூ, திரு அசோக்குமார் மற்றும் திரு உமாபதி ஆகியோர் இப்புத்தகப்பைகளை நேரில் சென்று
இத்தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எடுத்து வழங்கினர்.

நம் மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறக்கவும், தமிழ்ப்பள்ளிகளின் தரம் மேம்பட அயராது பாடுபடும் ஆசிரிய பெருமக்களுக்கும் இவ்வேளையில் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்து கொண்டுள்ளார்.

மேலும், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளாவிய நிலையில் பல வெற்றி வாகை சூடி வருகின்றனர் தொடர்ந்து நம் மாணவர்களின் பல்வேறு சாதனைகளை உலக அரங்கில் பதித்துத் தமிழ்ப்பள்ளிகளின் அடையாளத்தை உலக அரங்கில் தடம் பதித்து வெற்றி காண வேண்டும் எனவும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



