
கம்போங் பூங்கா ராயா குடியிருப்பில் வாழ்ந்த 118 குடும்பங்கள் புதிய selangorku வீடுகளில் குடியேறுவார்கள் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தகவல்
ஷா ஆலம், மார்ச் 11 –
சுங்கை பூலோ கம்போங் பூங்கா ராயாவில் குடியிருந்த 118 குடும்பங்கள் Rumah Selangorku புதிய வீடுகளில் குடியேறுவார்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கூறினார்.
இந்த புதிய வீடுகளுக்கான உறுதி கடிதங்கள் அவர்களிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த 118 குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படுகிறது என்றும் இதில். யாரும் விடுபடவில்லை என்றும் பாப்பா ராயுடு தெவித்தார்.
இதில் முதல் கட்டமாக 36 குடும்பங்கள்
ஈஜோக் Alam Perdana, Puncak Alam என்ற பகுதியில் RM42,000 மதிப்புள்ள புதிய சிலாங்கூர் கூ வீடுகளில் குடியேறுவார்கள் என்று பாப்பா ராயுடு சொன்னார்.
இதில் மீதமுள்ள குடும்பங்கள் கட்டம் கட்டமாக புதிய வீடுகளில் குடியேறுவார்கள். கம்போங் பூங்கா ராயாவில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் புதிய வீடுகளில் இவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் குடியேறுகிவார்கள் என்றார் ராயுடு.
இந்த புதிய வீட்டின் சந்தை விலை 1 லட்சத்து 50,000 வெள்ளி என்று சிலாங்கூர் சொத்துடமை வீடமைப்பு இலாகா மதிப்பிட்டுள்ளது. ஆனால் கம்போங் பூங்கா ராயா குடும்பங்களுக்கு 42,000 வெள்ளியில் மட்டுமே வழங்கப்படுகிறது என்று பாப்பா ராயுடு குறிப்பிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் கம்போங் பூங்கா ராயா மக்கள் பிரச்சினை நல்ல முறையில் தீர்க்கப்பட்டுள்ளது. மூன்று அறைகள், இரண்டு கழிப்பறைகள் கொண்ட இந்த வீடுகள் மிகவும் வசதியானவை என்று ராயுடு சொன்னார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு அலுவலகத்தில் நடைபெற்ற செதியாளர் சந்திப்பில் ராயுடு இதனைத் தெரிவித்தார்.
கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் Muhammad Izuan Kasim மற்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் சிவராசா, கிராமத் தலைவர் திருமதி தேவி, பூங்கா ராயா குடிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஆகியோர் செய்தியாள் சந்திப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



