
வர்த்தகம் வழி முதலாளியாக வேண்டுமா? புரட்சி இயக்கத்தின் முதலாளி திட்டத்தில் பங்கேற்க வாருங்கள் ஏற்பாட்டாளர் உமாகாந்தன் அழைப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மார்ச் 12-
வர்த்தகம் வழி முதலாளியாக வேண்டுமா? புரட்சி இயக்கத்தை நாடுங்கள் என்று அதன் தலைவர் உமாகாந்தன் வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வர்த்தகத்தில் முன்னேற பொருளாதாரம் உட்பட பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் புரட்சி இயக்கம் முதலாளி எனும் வர்த்தக திட்ட நிகழ்வு ஒன்றை நடத்தவிருப்பதாக புரட்சி உமாகாந்தன் கூறினார்.

புரட்சி இயக்கத்தின் இந்த முதலாளி நிகழ்ச்சி மார்ச் 30ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியின் ஆதரவில் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் ஒத்துழைப்பில் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணிவரையில் நடைபெறவிருப்பதாக ஜாலான் ஈப்போ மெட்ராஸ் காபேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உமாகாந்தன் இதனை தெரிவித்தார்.
வர்த்தகம் தொடர்பான அமைச்சுகள், இலாகாக்கள், நிதியுதவி, கடனுதவி வழங்கும் இலாகாக்கள் உட்பட அனைத்தும் முதலாளி திட்ட நிகழ்வில் ஒரு கூரையிம் கீழ் இணையவுள்ளதாக உமாகாந்தன் சொன்னார்.
இந்த முதலாளி நிகழ்வின் உச்சக்கட்ட நிகழ்வாக மாலை 6 மணிக்கு தலைவர்களின் உரைகள், அங்கீகரிக்கும் நிகழ்வு, விருது வழங்குவது உட்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்திய சமுதாயத்திடையே பொருளாதார உருமாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் புரட்சி இயக்கம் முதலாளி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதி ஆதரவில் இந்நிகழ்வு நடந்தாலும் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் இந்நிகழ்வுக்காக ஒன்றினைய வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்று புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், புரட்சி இயக்கத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



