Malaysia

டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகத்தின் வழி 16 ஆண்டுகளுக்குப் பின் வலுவான அரசியல் நிலைத்தன்மை

ஷா ஆலம் டிச. 26- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்
தலைமைத்துவத்தின் வாயிலாக கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அரசியல் நிலைத்தன்மை வலுப்பெற்றுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அரசாங்கத்திற்கு எதிரான தவறான கருத்துகள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு
பிரசாரங்களை முறியடிக்க அன்வார் நிர்வாகத்தின் வெற்றிகள் மக்களுக்கு
எடுத்துரைக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு 22 மாதங்களைக் கடந்து 25
மாதங்களாக பதவியில் நீடிக்கும் முதலாவது பிரதமராக அன்வார்
விளங்குகிறார் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அதாவது 19 உறுப்புகள்
கட்சிகளைக் கொண்ட கூட்டணிக்கு பிரதமர் தலைமையேற்கிறார்.
அதோடு மட்டுமின்றி கடந்த 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை பெற்றத்
தலைவராகவும் அவர் விளங்குகிறார் என அமிருடின் கூறினார்.

ஆக்ககரமான கொள்கைகளை வகுப்பதிலும் ஒற்றுமை அரசின்
சாதனைகளின் உருவாகத்திலும் அரசியல் நிலைத்தன்மையின்
அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்துவதற்கு ஏதுவாக பிரதமர் அன்வாரின்
தலைமைத்துவ ஆற்றல் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button