
பத்துமலை திருத்தலத்தில் 140 அடி உயர முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் ஜனவரி 1ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் பக்தர்கள் கலந்து கொள்ள தான்ஶ்ரீ ஆர்.நடராஜா அழைப்பு
கோலாலம்பூர், டிச.26-
பத்துமலை திருத்தலத்தில் அமைந்திருக்கும் 140 அடி உயர முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்யும் வைபவம் ஜனவரி 1ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி நடைபெறவிருப்பதால் பக்தர்கள் இவ்விழாவில் திரளாக கலந்து கொள்ளும்படி கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
பத்துமலையில் முருகன் சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் 9ஆம் ஆண்டு பன்னீர் அபிஷேக விழா எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளதாக தான்ஸ்ரீ ஆர்.நடராஜா தேசம் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
இந்த விழா காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தொடங்கும். பக்தர்கள் அனைவரும் முருகன் சிலையில் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்யலாம். பக்த பெருமக்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு தான்ஶ்ரீ நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் முயற்சியில் 140 அடி உயர முருகன் சிலை பத்துமலையில் கட்டப்பட்ட நிலையில்
தற்போது இந்த முருகன் சிலை மலேசியாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது என்பது இந்து பெருமக்களுக்கு பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.



