Malaysia

ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ நெல்சன் போட்டி?

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், மார்ச் 27-

ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு ம.இ.கா கல்விக்குழுத் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கசாமி போட்டியிடவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் தொடர்பில் டத்தோ நெல்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட எண்ணம் கொண்டிருக்கிறேன். எனினும் தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேவரன் பச்சை கொடி காட்ட வேண்டும். அவரது அணியில் நான் இடம்பெற வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று டத்தோ நெல்சன் பதிலளித்தார்.

தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் அவரது அணியில் இருந்தால் மட்டுமே அனைவரும் இணைந்து வேலை செய்ய முடியும் என்பதால் தான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆதரவை எதிர்பார்ப்பதாக டத்தோ நெல்சன் சொன்னார்.

ம.இ.கா தேசிய தலைவராக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ம.இ.கா தேசிய துணைத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button