
ம.இ.கா தேசிய தலைவராக தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏகமனதாக தேர்வு 3014 கிளைகள் ஆதரவு பாரங்களை வழங்கின
தேசம் செய்திகள் குணாளன் மணியம்,ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மார்ச் 27-
ம.இ.கா தேசிய தலைவராக தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மூன்றாவது தவணையாக 3,014 கிளைகளின் ஆதரவுடன் ஏகமனதாக தேர்வு பெற்றுள்ளார்.

ம.இ.கா தலைமையகத.தில் இன்று மார்ச் 27 காலை 11.30 மணிக்கு தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் அவருக்கு 3014 கிளைகள் ஆதரவு பாரங்களை சமர்ப்பித்தன.
தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேர்தல் குழுத்தலைவராக இருந்த கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனிடம் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை வழங்கினார்.
இந்நிலையில் கட்சியின் மாநில தலைவர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் முன்றாவது தவணையாக ம.இ.காவின் தேசிய தலைவராக தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏகமனதாக தேர்வு பெற்றதாக வேட்புமனு தலைவரும் ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்தார்.
தான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



