
6 பெர்சத்து உறுப்பினர்கள் நீக்கமா அல்லது கட்சித் தாவலா? மக்களவை சபாநாயகரே முடிவு செய்யட்டும் தான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் கருத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன், ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூன் 22-
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலை குறித்து சபாநாயகர் முடிவு செய்யட்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
பெர்சத்து கட்சியின் சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களின் நிலைப்பாடு குறித்து சபாநாயகரின் முடிவுக்காக காத்திருப்போம் என்று மஇகா தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேளவிக்கு தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியின் தலைமைத்துவம் அவர்களின் நாடாளுமன்ற தொகுதிகளையும் காலி செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை நீக்கமா அல்லது கட்சித் தாவலா என்பதை முடிவு செய்ய மக்களவை சபாநாயகரே மிகவும் தகுதியானவராக தான் கருதுவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.



