
சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுங்கள் ஃபஹ்மி ஃபாட்சில் ஆலோசனை
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
கோலாலம்பூர்,ஜூன் 22-
சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் இருதரப்பு கட்சிகளும்
தேர்தல் விதிமுறைகளைப் பின் பற்ற வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்யும் இரு தரப்பும் கவனமாகச் செயல்பட வேண்டும். பிரச்சாரக் காணொலிகளில் 3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான எந்தவொரு கருத்துகளையும் வெளியிடக் கூடாது என்று ஃபஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டார்.
இந்த இடைத்தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளைப் பயன்படுத்தி தவறான கருத்துகளைப் பதிவிட வேண்டாம். இதில் குறிப்பாக டிக் டாக், முகநூல் தளங்களில் நேரலை செய்யும் போதும் கவனமாக கையாள வேண்டும் என்று அவர் சொன்னார்.
இருதரப்பு ஆதரவாளர்கள் அல்லது தலைவர்கள் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டால் மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரிக்கை விடுத்தார்.



