
மஇகா தேர்தலில் ஜாதி,பண அரசியல் வேண்டாம் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் எச்சரிக்கை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூன் 22-
இந்த ம.இ.கா தேர்தலில் யாரும் பணம் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அது போலவே யாரும் ஜாதியை வைத்து பிரச்சாரம் செய்யக் கூடாது. கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் இந்த விஷயத்தில் நான் மிகவும் கண்டிப்புடன் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
கட்சியின் வள்ர்ச்சிக்கு பாடுபடும் தலைவர்கள் இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட வேண்டும். மஇகா தேர்தலில் பணம், ஜாதியை வைத்து யாரும் தயவுசெய்து பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கேட்டுக் கொண்டார்.
மஇகாவின் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ சரவணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனது இந்த வேண்டுகோளுக்கு இணங்க அவரை மீண்டும் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்த அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
கட்சியின் உதவித் தலைவர், மத்திய செயலவை, மாநில பொறுப்பாளர்களுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் நியாயமான முறையிலும் கட்சியின் சட்டவிதிகளுக்கு உட்பட்டும் நடத்தப்படுவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.



