Malaysia

மாணவர்களுக்கு கல்வி தூண்களாக விளங்கும் பள்ளிகளில் மதமாற்றமா? myPPP இளைஞர் பிரிவு கடுமையாகக் கண்டிகக்கிறது சத்தியா சுதாகரன் அறிக்கை

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர் ஜூன் 21-

மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் தூண்களாகவும் அறிவு கூடமாக விளங்க வேண்டுமே தவிர மதமாற்றம் செய்யும் இடங்களாக இருக்கக் கூடாது என்று மைபிபிபி இளைஞர் பிரிவு தலைவர் சத்தியா சுதாகரன் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் பாதுகாப்பான புகலிடமாக இருக்க வேண்டும். சமீபத்தில் பள்ளியில் நடந்த மதமாற்றம் தொடர்பான சம்பவம் குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக என்று சத்தியா சுதாகரன் கூறினார்.

பள்ளிகள் மத அரசியலுக்கான களம் அல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு. ஒரு பள்ளிக்குள் நடக்கும் மதமாற்றம் இந்த கொள்கையை மீறுகிறது மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது என்று சத்தியா தெரிவித்தார். .

மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அதேநேரத்தில் பள்ளிகள் மதத்திற்காகப் பயன்படுத்தும் எந்தச் செயலுக்கும் நாங்கள் எதிர்ப்போம் என்று சத்தியா திட்டவட்டமாக சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் உறுதியளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுவது கட்டாயம் என்றார் சத்தியா.

நமது பள்ளிகள் எல்லாப் பின்னணியிலும் உள்ள மாணவர்கள் மரியாதையாகவும் பாதுகாப்பாகவும் உணரும் இடங்களாகவே இருக்கின்றன. இதை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.

கல்வியானது மாணவர்களை சுதந்திரமாக தகவலறிந்த முடிவுகளை எடுக்க அதிகாரம் அளிக்க வேண்டும்.

நமது பள்ளிகளின் புனிதத்தைப் பாதுகாத்து, அவை கல்வி கற்கும் இடமாக இருப்பதை உறுதி செய்வது மிகமிக அவசியம் என்று சத்தியா சுதாகரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button