Malaysia

MIED எனப்படும் மாஜூ இந்திய கல்வி மேம்பாட்டு வாரியம் வழி 15 மில்லியன் கல்வி உபகார சம்பளம், கல்வி கடனுதவி மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டவர்களின் சுமைமை குறைக்கும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை

புத்ராஜெயா, ஏப்.29-
MIED எனப்படும் மாஜூ இந்திய கல்வி மேம்பாட்டு வாரியம் மாணவர்களுக்கு வழங்கிய 15 மில்லியன் கல்வி உபகார சம்பளம், கல்வி கடனுதவி
மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்களின் சுமைமை குறைக்கும்
என்று அதன் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர்களின் எதிர்கால நலனுக்காக உருவாக்கப்பட்ட ம.இ.காவின் கல்விக்கழகங்கள் இந்திய மாணவர்களின் நலனுக்காக தொடர்ந்து பங்காற்றும் என்று மாணவர்களுக்கு MIED காசோலை வழங்கும் விழாவுக்கு பின் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏய்ம்ஸ்ட் கல்லூரி கட்டுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் அது செயல்படத் தொடங்கும்.
துன் சாமிவேலுவின் மகத்தான திட்டங்களான எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரி ஆகியவை இப்போது சமுதாயத்தின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது என்பதால் இந்திய மாணவர்கள் கல்விநலன் காக்கப்பட்டுள்ளதாக
மஇகாவின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

எம்ஐஇடி வழி ஆண்டுதோறும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மஇகா உறுப்பினர்களின் பிள்ளைகள் என்று எந்தவொரு பாகுபாடின்றி அனைவருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இந்த MIED காசோலை வழங்கும் நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டது எம்ஐஇடியின் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் தற்போது கெடாவில் செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஏய்ம்ஸ்ட் கல்லூரி கிள்ளான் பள்ளத்தாக்கில் கட்டப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏய்ம்ஸ்ட் கல்லூரி கிள்ளான் பள்ளத்தாக்கில் கட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ம் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இதனிடையே இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்திய சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்கு ஏம்ய்ஸ்ட், டேப் கல்லூரியை உருவாக்கிய துன் சாமிவேலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்தியச் சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் எம்ஐஇடி கல்வி கடன் திட்டம், ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகம், டேப் கல்லூரி என பல ஆக்க்கபூர்வமான திட்டங்களை துன் சாமிவேலு உருவாக்கினார்.
அவரின் இந்த சாதனையை நாம் நினைவு கூற வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே டேப் கல்லூரியில் திவேட் தொழில் திறன் கல்வி திட்டத்திற்கு அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட் வழங்கும் என பிரதமர் கூறினார்.

புத்ராஜெயாவில் எம்ஐஇடி கல்வி நிதி வழங்கும் விழாவுக்கு தலைமையேற்று மாணவர்களுக்கு காசோலைகளை எடுத்து வழங்கினார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இந்த நிகழ்வில் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ த.மோகன், டத்தோ முருகையா, டத்தோ கோகிலன், டத்தோ நெல்சன், தான்ஸ்ரீ ராமசாமி, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள், துணையமைச்சர் டத்தோ ரமணன், கணபதிராவ், குணராஜ் ஜோர்ஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button