
முதியோர் இல்லத்தின் பெண் பணியாளர் முதியவரை கட்டையால் அடித்தாரா? சமூகவலைத்தளங்களில் வைரலாகிய காணொளி
பாடாங் செராய்,ஏப்.29-
பாடாங் செராயில் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு மையத்தின் பெண் பராமரிப்பாளர் ஒருவர் முதியவரை கட்டையால் அடித்த காணொளி ஒன்று சமூகவலைத்தலங்களில் வைரலாகியுள்ளது.
இந்த பராமரிப்பு மையம் அட்டா ஆர்த்தி முதியோர் பராமரிப்பு மையம் என அழைக்கப்படுகிறது
மையத்தின் நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், மையத்தின் கீழ் உள்ள அனைத்து முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்பப்படுவதாகவும் அந்ந காணொளியை வெளியிட்ட ஒரு தரப்பு கூறியது.
மேலும் பல முதியோர்கள் மையத்தின் நடத்துனரால் தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து தனக்கு பல அழைப்புகள் வந்துள்ளன.
பதிவு செய்யப்பட்ட அனைத்து பராமரிப்பு மையங்களையும் கண்காணிக்க சமூகநல இலாகா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் அனைத்து பராமரிப்பு மையங்களும் SOP-க்கு இணங்கி செயல்படுகிறதா என்று ஆராய வேண்டும்.
பராமரிப்பு மையத்தில் இருக்கும் முதியவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற ஏதேனும் இருந்தால் அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் உடனடி நடவடிக்கை பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த காணொளியை வெளியிட்டவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
போலீசார், மாநில சமூக நலத்துறை,
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் போன்றவை நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



