Malaysia

இளையோரை நெறிப்படுத்த, அனைவரும் வாழ்வாங்கு வாழ ஆலயங்கள் சேவை மையங்களாக உருமாற்றம் காண வேண்டும் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள்

பந்திங், ஜூன் 9-
இளையோரை நெறிப்படுத்தி சமுதாயம் வாழ்வாங்கு வாழ நமது ஆலயங்கள் சேவை மையங்களாக உருமாற்றம் காண வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்
எனும் குறளுக்கு ஏற்ப நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும் என்று
சிலாங்கூர், தஞ்சோங் சிப்பாட், தாமான் காடோங், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய கால்கோல் பூமி பூஜை விழாவின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

இந்த ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் காடோங் தோட்டத்தில் முன்பு வீற்றிருந்தது.
பிறகு, மேம்பாட்டு நிறுவனத்துக்கு தோட்டம் விற்கப்பட்டு விட்ட நிலையில், மாற்று நிலத்தில் புதிய ஆலயம் எழுப்பப்படவுள்ளது.

இந்த ஆலயத்தின் கால் கோல் விழா நேற்று காலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பூமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button