Malaysia

ரந்தாவ் கோல சாவா ஸ்ரீ சிவசங்கர் வால்முனி வண்ணமுனி ஆலயத் திருவிழா பக்தர்கள் கலந்து கொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு

ரந்தாவ், ஜூன் 9-
பக்தர்கள் மத்தியில் நன்கு புகழ்ப்பெற்ற ஸ்ரீ சிவசங்கர் வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் 29ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா ஜூன் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிரமை மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது.

ரந்தாவ் கோல சாவா ஸ்ரீ சிவசங்கர் வால்முனி வண்ணமுனி ஆலயம் மலேசியர்கள் மத்தியில் நன்கு புகழ்ப்பெற்ற ஆலயமாகும். கோல சாவா ஆலயம் என்றால் இந்து பக்தர்கள் மத்தியில் நினைவுக்கு வருவது வால்முனி வண்ணமுனி ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா மிகவும் விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரந்தாவ் கோல சாவா ஸ்ரீ சிவசங்கர் வால்முனி வண்ணமுனி ஆலயத்தின் இவ்வாண்டுக்கான 29ஆம் ஆண்டு திருவிழா ஜூன் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

இந்த திருவிழாவை முன்னிட்டு ஜூன் 15 சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு ஆலயத்தில் பால்குடம் எடுத்தல், கரகம் பாலித்தல், தீச்சட்டி ஏந்தி ஆற்றங்கரையில் இருந்து பல்லாக்கில் அம்மாவை ஏற்றி வருதல் ஆகியவை நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரந்தாவ் கோல சாவா ஸ்ரீ சிவசங்கர் வால்முனி வண்ணமுனி ஆலய திருவிழா நாளன்று காலை 10 மணிக்கு ஸ்ரீ சிவசங்கரி அம்மாவுக்கு யாகப் பூஜை நடைபெறும். அதன்பிறகு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு விக்னேஸ்வர பூஜைக்கு பிறகு பிற்பகல் 1.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும்.

ஆகையால், ரந்தாவ் கோல சாவா ஸ்ரீ சிவசங்கர் வால்முனி வண்ணமுனி ஆலயத் திருவிழாவில் சுற்று வட்டார பக்தர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளும்படி ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்புக்கு 012-6141909

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button