
India Gate நிறுவனத்தின் 9ஆவது கிளை உணவகம் Tropicana Golf & Country Resortடில் ஜூன் 14ஆம் தேதி திறப்பு விழா காண்கிறது
கோலாலம்பூர், ஜூன் 9-
உணவகத் துறையில் தனித்துவம் பெற்று சிறந்த உணவகம் என்று பெயர் பெற்றுள்ள India Gate நிறுவனம் தனது 9ஆவது கிளை உணவகத்தை Tropicana Golf & Country Resort பெட்டாஙிங் ஜெயாவில் ஜூன் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு திறப்பு விழா செய்கிறது.
இந்த Tropicana Golf & Country Resortடில் திறப்பு விழா காணும் 9ஆவது கிளை உணவகம் மாறுபட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. India Gate Signature எனும் பெயரில் மாறுபட்ட கோணத்தில் உணவகம் அமையப் பெற்றுள்ளது. உணவகத்தின் வடிவமைப்பு, உணவு வகைகள், வாடிக்கையாளர்களுக்கான Plate, கரண்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தனித்துவம் பெற்றுள்ளது.
Tropicana Golf & Country Resort உணவகம் பெரிய பிரபலமான இடத்தில் அமையவுள்ளதால் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உணவகம் அமைந்துள்ளது. அதேநேரத்தில் 600 பேர் அமரக்கூடிய Ballroom மண்டபம் ஒன்றும் மாறுபட்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 130 பேர் வரை உணவருந்த முடியும். அதேநேரத்தில் Private Room என்று சொல்லக்கூடிய 4 தனிப்பட்ட உணவு அறைகளும் உள்ளன. இதில் சிறப்பான நிறுவன தனிப்பட்ட சந்திப்புகள், குடும்ப விழாக்களை நடத்தலாம். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
உணவகத்தை சிறந்த முறையில் அழகுபடுத்தி தனித்துவத்தோடு அதன் அமைப்பை வடிவமைத்துள்ளது. சிறந்த சேவை,
வாடிக்கையாளர்களை கவனித்து
நிறைவு செய்யும் விதம், மதிப்பும் மரியாதையும் அன்பும் கொண்ட வாடிக்கையாளர்கள் உபசரிப்பு ஆகியவை
மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது
INDIA GATE உணவகம்…
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உபசரிப்பு மட்டும்தானா…இல்லை…இல்லை…சுவையான உணவு வகைகள்தான் முத்தாய்ப்பு…
அதன் வெற்றிக்கு அடித்தளம் எனலாம்.
உணவகத்தில் சுடச்சுட வழங்கப்படும் அனைத்து வகையான உணவுகளும் சுவையில் மிளிர்கிறது. இதுவே
ஆயிரக்கணக்காண வாடிக்கையாளர்களை அள்ளிக் குவித்த தாரக மந்திரம்…
பங்சார், பூச்சோங், சைபர் ஜெயா, சுபாங் ஜெயா, கிள்ளான், சிரம்பான், செமினி, செந்தூல் என்று பல கிளைகளை ஏற்கெனவே அமைத்துள்ளதற்கு வாடிக்கையாளர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றதற்கு ஆதாரமாகும் என்றால் அது மிகையில்லை.
இந்த INDIA GATE Signature உணவகம் Tropicana Golf & Country Resortடில் திறப்பு விழா காண்பதால் அழைப்பு கிடைத்தவர்கள் கலந்து கொள்ளலாம். அதேநேரத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல் பொதுமக்கள் உணவருந்த வரலாம்.
INDIA GATE உணவகம் தொடர்ந்து வெற்றி நடை போட தேசம் ஊடகம் வாழ்த்துகிறது.