
உங்கள் பிள்ளைகள் எஸ்.பி.எம் தேர்வில் STRAIGHT A பெற வேண்டுமா? MPT HOME TUTOR CENTRE மாணவர்களுக்கு வழிகாட்கிறது
மந்தின், ஜூன் 8-
உங்கள் பிள்ளைகள் எஸ்.பி.எம் தேர்வில் Straight A பெற வேண்டுமா? இதற்கு வழி காட்டுகிறது கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நெகிரி செம்பிலான், மந்தின் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் MPT HOME TUTOR CENTRE வழி காட்டுவதாக இதன் தோற்றுநரும் தேசிய மொழி ஆசிரியருமான பிரகாஷ் சுப்ரமணியம் கூறினார்.
இந்த MPT HOME TUTOR CENTRE கல்வி மையம் மந்தின் பகுதியில் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடங்களை போதித்து வருகிறது. இதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆசிரியர்கள் பாடங்களை போதித்து வருகின்றனர். அதேநேரத்தில் தாங்கள் வீட்டுக்கு சென்று பிரத்தியேகமாக பாடங்களை நடத்தி வருவதாக பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த MPT HOME TUTOR CENTRE கல்வி மையத்தில் மொத்தம் 14 ஆசிரியர்கள் பாடம் போதித்து வருகிறார்கள். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பாடம் போதிக்கின்றனர். இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் போதிக்கின்றனர். எனினும் பாட விவரங்கள் குறித்து பள்ளி ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து பாடம் போதிக்கப்படுகிறது.
இந்த MPT HOME TUTOR CENTRE கல்வி மையத்தில் பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களுக்கு இடையிலான வயது இடைவெளி மிகவும் குறைவு என்பதால் மாணவர்களின் சூழ்நிலை, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பாடம் நடத்துவதால் மாணவர்கள் நல்ல தேர்ச்சியை பெற முடிகிறது.
பள்ளி ஆசிரியர்கள் அப்பா-அம்மா நிலையிலும் நாங்கள் ஒரு நண்பர் என்ற நிலையிலும் இருந்து பாடம் போதிக்கிறோம். இதனால் மாணவர்கள் மிகவும் எளிதான வகையில் படிக்க முடிகிறது. நாங்கள் குறைந்த அளவிலான மாணவர் எண்ணிக்கையில் டியூசன் வகுப்புகளை நடத்துகிறோம். அதிகமான மாணவர்கள் இருந்தால் இரண்டு குழுக்களாக பிரித்து பாடம் நடத்துவோம்.
எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் 5 முதல் 10 பேர் அடங்கிய மாணவர்கள் நல்ல தேர்ச்சியை பெற்றுள்ளனர். தற்போது பலர் எங்களை அடையாளம் கண்டுள்ளதால் பெரிய அளவில் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
அதேநேரத்தில் வீடுகளுக்கு சென்று பிரத்தியேக வகுப்புகளையும் நடத்தி வருவதால் நல்ல தேர்வு முடிவுகளை மாணவர்களால் பெற முடிகிறது. இதில் எஸ்.பி.எம் மாணவர்களும் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
கடந்த 2022 மற்றும் 2023இல் 30 மாணவர்கள் படித்தனர். இவர்களில் அதிகபட்சமாக 25 மாணவர்கள் நல்ல தேர்ச்சியை பெற்றுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகள் MPT HOME TUTOR CENTRE கல்வி மையத்திற்கு ஒரு மைல் கல்லாகும் என்றால் அது மிகையில்லை.
எங்களிடம் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் நல்ல தேர்வு தேர்ச்சி முடிவுகளை எடுக்கின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் 6A பெறுகின்றனர். ஆகையால், மாணவர்கள் எங்களிடம் தாராளமாக படிக்க வரலாம். சிறந்த முறையில் பாடம் போதிக்க தயாராக இருப்பதாக பிரகாஷ் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார். தொடர்புக்கு 019-397 7298