CinemaMalaysiaOthers

50 ஆண்டுகள் பரத நாட்டியத் துறையில் கோலோச்சும்  ஸ்ரீ மதி ஜெய கெளரி

50 ஆண்டுகள் பரத நாட்டியத் துறையில் கோலோச்சும் ஸ்ரீ மதி ஜெய கெளரி

கோலாலம்பூர், டிச.31-

போபரத நாட்டிய கலைக்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்டு 50க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்களை உருவாக்கியுள்ள ஸ்ரீமதி ஜெய கெளரி கிருஷ்ணசாமியைப் பாராட்டும் விழாவாகக் குரு சமர்ப்பணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தம்முடைய 15ஆவது வயதில் சென்னை கே.என் தண்டாயுதபாணி கலைக்கூடத்தில் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்ட அவர் அங்கேயே அரங்கேற்றமும் செய்துள்ளார்.

அதன் பின்னர், அவருடைய 20ஆவது வயதில் பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாகப் பரத நாட்டிய வகுப்பினைத் தொடங்கியுள்ளார்.

அதன் பின்னர் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக இக்கலைத் துறையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,000 மாணவர்கள் அவரிடம் பரதம் கற்றுக் கொண்டுள்ளனர். அதோடு, 100 பரத நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கிய பெருமையும் அவரையே சேரும்.

எனவே, அவரின் சாதனைகளை எடுத்துக் கூறும் விழாவாக, மாணவர்கள் அனைவரும் இணைந்து குரு சமர்ப்பணம் என்ற இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

நாட்டியத்தின் மீதான பற்றின் கரணமாக இன்றளவும் மாணவர்களுக்கு அக்கலையை கற்றுத் தரும் ஸ்ரீமதி ஜெய கெளரி அத்துறையில் ஈடுபட்டுள்ள பலருக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button