India

அண்ணாமலையின் கோரிக்கையால் தீவுத்திடலை தந்தது திமுக அரசு

அண்ணாமலையின் கோரிக்கையால் தீவுத்திடலை தந்தது திமுக அரசுமனமுருகி இறுதி அஞ்சலி செலுத்தினார் அண்ணாமலை

சென்னை, டிச.31-

மறைந்த விஜயகாந்தின் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் குறுகிய சிறிய இடத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் நெரிசலில் சிக்கி மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தவும் முகத்தை பார்க்கவும் முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர்.

கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நினைத்தவர்களும் வெளியூர்களில் இருந்து வர நினைத்த அவரது கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் நாம் போனால் பார்க்க முடியுமா.? முடியாதா என்று கனத்த இதயத்துடன் நினைத்த போது அஞ்சலி செலுத்த வந்தார் திரு. அண்ணாமலை.

மக்களின் அன்பை பெற்ற மறைந்த தலைவருக்கு இது சரியான இறுதி மரியாதை இல்லை என்பதை உணர்ந்த அண்ணாமலை.

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட வேண்டுமென உரக்க ஒரு கோரிக்கை வைத்தார்.

அதுவரை யாருக்கும் அது தோன்றவில்லை விஜயகாந்த் குடும்பத்தினருக்கோ அஞ்சலி செலுத்த வந்த தமிழக முதல்வருக்கோ அவருடன் பழகிய பிரபலங்களுக்கோ கூட இது தோன்றவில்லை.

அண்ணாமலை கேட்ட பின் பல முயற்சி அழுத்தங்களுக்கு பின் தீவுத்திடலை தந்தது திமுக அரசு. அண்ணாமலையின் அந்த முயற்சி இன்று உள்ளூரில் இருந்தும் வெளியூர்களில் இருந்து வந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கடைசியாக கேப்டனின் முகத்தை பார்க்கவும் அஞ்சலி செலுத்தவும் வாய்ப்பாக அமைந்தது.

இதனால் ஏழு கிலோ மீட்டர் இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரளாய் பங்கேற்றுள்ளனர்

கட்சி அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தால் மறைந்த அந்த நல்ல மனிதருக்கு இந்த சிறப்பு கிடைத்திருக்குமா.?

அவரது ஆன்மா தான் சாந்தி அடைந்திருக்குமா.?

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தை முன்னின்று சிறப்பாக நடத்தினார் விஜயகாந்த். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல அன்று விஜயகாந்த் செய்த புண்ணியம் இன்று அண்ணாமலை உருவத்தில் பிரதிபலனாய் வந்திருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button