
அர்விந்த் – கேசவன் அணிக்கு மஇகா பகாங் இளைஞர் பிரிவு முழு ஆதரவ
மெந்தகாப், ஜூன் 10-
மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு களமிறங்கும் நடப்புச் செயலாளர் அர்விந்துக்கும், துணைத் தலைவர் பதவிக்கு முன்னேறும் நடப்புப் பொருளாளர் கேசவனுக்கும் மஇகா பகாங் மாநில இளைஞர் பிரிவு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
அண்மையில் இங்கு மாநில இளைஞர் அணியுடன் நடைபெற்ற சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக இம்முடிவை எடுத்ததாக மாநில இளைஞர் பிரிவு தலைவர் உகனேஸ்வரன் சொன்னார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில், இளைஞர் அணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அவரின் தூர நோக்கு சிந்தனைக்கு ஊடாக, அர்விந்த் – கேசவன் அணியினர் மிகச் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகின்றனர்.
நாடு முழுவதும் இளைஞர் அணியின் நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றலாம், இவ்விருவரும் தங்களின் அணியோடி களமிறங்கி, நட்பு பாராட்டுகின்றனர்.
இத்தகைய சீரிய தலைமைத்துவமே நமக்குத் தேவை. ஆகையால், அர்விந்த் – கேசசன் அணியினருக்கு நாங்கள் முழு ஆதரவு கொடுக்கின்றோம் என உகனேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கிடையில், மஇகா பகாங் மாநில இளைஞர் பிரிவின் முடிவுக்கு மஇகா ரவுப் தொகுதி கட்டுப்படுவதாகவும், அர்விந்த் – கேசவன் அணிக்கு நாங்கள் முழு வழங்குகிறோம் என அத்தொகுதி காங்கிரசின் இளைஞர் பிரிவு தலைவர் பிரகதீஸ்வரன் குறிப்பிட்டார்.



