
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 16ஆவது பேராளர் மாநாடு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தொடக்கி வைப்பார் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தகவல்
கோலாலம்பூர்,செப்.27-
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு வரும் செப்டம்பர் 28, 29ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் கூறினார்.
இந்த பேராளர் மாநாட்டை துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தொடக்கி வைக்கும் நிலையில் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவிருப்பதாக டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.
இந்த மக்கள் சக்தி கட்சியின் 16ஆவது பேராளர் மாநாடு ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இதில் செப்டம்பர் 28ஆம் தேதி பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரை இளைஞர், மகளிர், புத்ரி பிரிவுகளுக்கான மாநாடு நடைபெறவுள்ளதாகவும்
மறுநாள் காலை 9 மணி முதல் தேசிய பேராளர் மாநாட்டு நடைபெறவுள்ளது என்றும் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் சொன்னார்.
இம்மாநாட்டில் ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. மேலும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, அரசியல் பாதை, அடுத்த தேர்தலுக்கு தயாராவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக டத்தோஸ்ரீ ஆர்எஸ் குறிப்பிட்டுள்ளார்.



