Malaysia

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பொருளாதாரத்தை மேம்படுத்தும்-பிரதமர

கோலாலம்பூர்,செப்.27-
மலேசியாவின் பொருளாதார மேம்பாட்டில் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்கி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இதனை முன்னேடுபதற்கான பெரும்பான்மை இருப்பதால் அரசியல் நிலைத்தன்மை, மலேசியாவிற்கு மிகச்சிறந்த நிர்வாகத் திறனையும் ஊழலற்ற ஆட்சி முறையையும் நிலைநிறுத்துவதற்கு வழிவகுப்பதாக பிரதமர் சொன்னார்.

இதன் மூலம், முன்னர் ஊழல் மற்றும் தளர்வான நிர்வாகத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட நாட்டின் மதிப்பையும் சீர்செய்ய முடியும் என்றார்.

“ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசின் முதலாளிக்குரிய முக்கியத்துவம் கொண்டது. இவற்றை உறுதியாகவும் தொடர் முறையிலும் கையாள வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்,” என பிரதமர் சொன்னார்.

“சிறந்த நிர்வாகத்தின் மூலம், நாட்டு மக்களை ஊழலிலிருந்து மீட்கும் நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் அதிக துல்லியமும் திறமையும் அடைய முடியும், மேலும் வணிக நடவடிக்கைகளும் எளிதாகும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button