
என் கல்விக்கு உதவிய மஇகாவுக்காக உழைக்க மத்திய செயலவைக்கு போட்டியிடுகிறேன்: காந்தன்
குணாளன் மணியம, ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீ நிவாஸ்
கோலாலம்பூர்,ஜூன் 26-
நாட்டில் நமக்கும் சம வாய்ப்புகள், தேசத்தின் எதிர்காலத்தில் வலுவான குரல் இருப்பதை உறுதி செய்ய தான் மத்திய செயலவைக்கு போட்டியிடவிருப்பதாக
எம்.காந்தன் கூறினார்.
இந்திய சமூகம் எதிர்நோக்கி இருக்கும் அரசியல் சவால்களை சமாளிக்க மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், விலாயா மாநில தலைவர் டத்தோ சைமன் ராஜா ஆகியோருடன் இணைந்து பணியாற்றப் போவதாக செய்தியாளர் சந்திப்பில் காந்தன் தெரிவித்தார்.
ம.இ.கா என் கல்விக்கு உதவியுள்ளது. ஆகையால் மஇகாவுக்காக உழைக்க மத்திய செயலவைக்கு நான் போட்டியிடுகிறேன். மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 45 பேர் போட்டியிடுகிறார்கள்.
அதில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று காந்தன் தெரிவித்தார்.
எனது அருமை பாட்டி கமலாட்சி ஆறுமுகம் மஇகாவில் நீண்ட காலம் அயராது பணியாற்றியுள்ளார். அவரது ஆசியோடு நான் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.
அவர் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ம.இ.கா மகளிர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினராக இருந்து அளப்பரிய சேவை வழங்கியுள்ளதாக காந்தன் சொன்னார்.
எனது அரசியல் பயணத்திற்கு ஒரு முன்னோடியாக மஇகாவும் என் பாட்டியும் விளங்குகிறார்கள்.
என் கல்விக்கு கட்சி உதவியது நான் என்றும் மறக்க மாட்டேன். எனது பாட்டி கமலாட்சி ஆறுமுகம் அவர்களால் அரசியலில் முழுமூச்சாக களம் இறங்கி இருப்பதாக காந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி, இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன். என் பாட்டி கமலாட்சி ஆறுமுகம் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
மஇகாவுக்கும் எனது இந்திய சமுதாயத்தின் நல் வாழ்விற்கு பங்களிப்பதில் எனது உண்மையான அர்ப்பணிப்பு இருக்கும் என்று காந்தன் உறுதியளித்துள்ளார்.
ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அர்த்தமுள்ள ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.
இந்திய சமுதாயத்தின் குரல்களுக்கு செவி சாய்த்து அவற்றுக்கு தீர்வு காண நான் உறுதி பூண்டிருக்கிறேன். மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டிடும் என்னை பேராளர்கள் வெற்றி பெற செய்யும்படி காந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.



