
Malaysia
மூன்று மரமத்து இலாகா சிப்பந்திகள் நீரில் மூழ்கி பலி.
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
கம்பார், நவ.17-
வெள்ளிக்கிழமை மாலை வேளையில்
கோப்பெங் சுங்கை ஜாஹாங் ஆற்றில் நீர் படகு பயிற்சியில் ஈடுபட்டிருந்த தருவாயில் படகு கவிழ்ந்து பலியான
மூவரும் மரமத்து இலாகா சேர்ந்த பணியாளர்கள் என கம்பார் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் நஸ்ரி டவுட்
உறுதிப்படுத்தினார்.
ஒருவர் லங்காவி மரமத்து அலுவலகத்திலும்
மேலும் இருவர் செபராங் பெராய் தெங்கா மரமத்து அலுவலகத்திலும்
பணி புரிவதாக
தெரிவித்த அவர்
மாலை 5.56 மணியளவில் விபத்து நடந்த தகவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு
பெற்றதாகவும் மூவரும் மூச்சு திணரலால் மரண
மடைந்ததாக கூறினார்.



