
தேசிய முன்னணிக்கு ஐபிஎப் என்றென்றும் வற்றாத ஆதரவு வாய்ப்புகள் வழங்கி முன்னுரிமையை நிலைநாட்டுங்கள்
ஈப்போ, நவ.16-
ஐ.பி. எப். கட்சி அரசாங்கத்தில் ஊராட்சி மன்றங்களிலும் , கிராமத் தலைவர்கள் பொறுப்பில் வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்று பேரா் மாநில ஐ.பி்.எப். கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கட்சியின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து நிதி உதவிகள் மற்றும் வசதி குறைந்த கட்சி உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று பேராக் மாநில ஐ.பி.எப் தலைவர் மாணிக்கம் கேட்டுக் கொண்டார்.
தேசிய முன்னணி கட்சியில் கடந்த 32 ஆண்டுகள் அதன் தோழமை கட்சியாக இருந்து சேவையாற்றி வருகிறது ஐ பி எப். இருந்தபோதும் அரசாங்கத்தில் ஐ.பி் .எப். கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறைபாட்டை உணருதல் மிகவும் அவசியமாகும். அதன் அடிப்படையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்று அவர குறிப்பிட்டார்.
பேரா மாநிலத்தில் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஊராட்சி மன்றம் மற்றும் கிராமத் தலைவர்கள் பொறுப்பில் இடம் பெற வாய்ப்பினை வழங்கவேண்டும் என்று கோரிக்கை தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாட்டில் மாநில மந்திரி பெசாரை பிரதி்நிதித்து கலந்துக்கொண்ட அவரின் அரசியல் செயலாளர் அமிடி பஹாருடினிடம் நிறைவேற்றபட்ட தீர்மான அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பேசிய அமிடி பஹாருடின் , ஐ.பி. எப். கட்சி தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதை வர் நினைவுக் கூர்ந்தார்.
தேசிய முன்னணியில் தோழமை கட்சியாக இருந்து வரும் ஐ. பி. எப். கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அது ஒரு அங்காரமாக கருதவேண்டும் தொடர்ந்து எதிர்காலத்தில் மேலும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று நம்பிக்கையுடன் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ தி. லோகநாதன் பேசியபோது தேசிய முன்னணிக்கு தொடரந்து வலுவான ஆதரவை வழங்கும என்று உறுதியளித்துடன் தோழமை கட்சியில் இருந்து ஒருபோதும் விலகாது, சோரம்போகாது என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக உறுப்பியம் பெற தொடர்ந்து போராடப்பட்டு வரும்.
இம்மாநாட்டில் ம. இ.காவிற்கு அடுத்து இந்தியர்கள் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக ஐ.பி். எப். இருந்து வருகிறது. ஆகவே அரசாங்கத்தில் பிரதிநித்துவம் தேவை என்ற கோரிக்கையை மாநில ஐ. பி் எப் கட்சி முன் வைத்துள்ளது.
இந்த நிகழ்வில் மாநில ஐ.பி.எப். கட்சி துணைத் தலைவர் அப்பளசாமி சிறந்த சேவைக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.



